TNPSC குரூப் 3 தேர்வர்களே உங்களுக்கான செய்தி – தேர்வு முடிவுகள் வெளியீடு!
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள குரூப் 3 தேர்வுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-III (குரூப்-III.A சர்வீசஸ்) மூலம் தமிழ்நாடு கூட்டுறவு துணைப் பணியில் கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் ஸ்டோர்-கீப்பர், தொழில்கள் மற்றும் வணிகத் துறையில் கிரேடு-II தமிழ்நாடு அமைச்சுப் பணி பதவிகளுக்கு 28.01.2023 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது.
TNPSC குரூப் 4 online class
31.08.2023 அன்று எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர் ஏற்கனவே பதிவேற்றிய ஆவணங்களின் அடிப்படையில் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக விவரங்களை TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.