TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு! முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு! முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 தேர்வு குறித்து பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

குரூப் 2:

தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக எந்த போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான அரசு போட்டித் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

CBSE ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதில் 2022ம் ஆண்டில் 22 வகையான தேர்வுகளை நடத்த TNPSC திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதில் தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வுகளில் 2022ம் ஆண்டில் 5831 காலியிடங்கள் உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சிறப்பம்சத்துடன் புதிய அப்டேட்!

இந்த குருப் 2 தேர்வை எழுத விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் குரூப் 2 தேர்வின் சில பதவிகளுக்கு கூடுதல் தகுதியாக தட்டச்சு முடித்திருக்க வேண்டும். முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடைபெறும். பொதுபிரிவினருக்கு 20 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும். முதன்மைத் தேர்வில் பகுதி ‘அ’ மற்றும் பகுதி ‘ஆ’ என இரு பகுதிகள் உள்ளது. ஒரு வினாவிற்கு 25 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண் வினாக்கள் இருக்கும் இதில் 25 மதிப்பெண் பெறுவது கட்டாயம். இந்த குறித்த பட்ச மதிப்பெண் பெறாதவர்களின் பகுதி ‘ஆ விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.

குரூப் 2 பாடத்திட்டம்:

முதல்நிலைத் தேர்வு கொள்குறி வகை தலைப்புகள்:
  • பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்.
  • முதன்மை தேர்வுக்கு பகுதி ‘ஆ’ வில் சுருக்கி வரைதல் பொருள் உணர்திறன் சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் கட்டுரை எழுதுதல், கடிதம் வரைதல் போன்ற தலைப்பில் வினாக்கள் கேட்கப்படும்
  • முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுப் பகுதியில் 175 வினாக்களும் கணித பகுதியில் 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!