TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மதிப்பெண் குறையுமா?

0
TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு - கட் ஆஃப் மதிப்பெண் குறையுமா?
TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு - கட் ஆஃப் மதிப்பெண் குறையுமா?
TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மதிப்பெண் குறையுமா?

TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் தமிழ் மொழிப்பாடம் மற்றும் கணித வினாக்கள் சற்று எளிமையாக இருந்தாலும், பொது அறிவுப் பகுதி வினாக்கள் கடினமாக இருந்ததால், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் TNPSC குரூப் 2 முந்தைய ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்களை இந்த பதிவில் சரிபார்க்கலாம்.

கட் ஆஃப் மதிப்பெண்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 5529 பதவிகளுக்கு நடந்த இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். சுமார் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. இதனிடையே, குரூப் 2 முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத் தேர்வுக்கு, ஒரு பதவிக்கு 10 பேர் (1:10) என்ற வீதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடைசி கட் ஆஃப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமானோர் இருந்தாலும், அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

TNPSC Group 2 Cut off என்பது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தகுதி பெற ஒரு தேர்வர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் ஆகும். அதாவது முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் இரண்டுக்கும் தனித்தனி கட் ஆஃப் மதிப்பெண்கள் உருவாக்கப்படும். ஒரு பதவியில் கடைசி ஒரு இடத்திற்கு 10 பேர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், அதே கட் ஆஃப் மதிப்பெண்ணை 100 பேர் பெற்றிருந்தால், 100 பேரும் முதன்மைத் தேர்வுக்கு தகுதி செய்யப்படுவார்கள். எனவே, 5529 பணியிடங்களுக்கு 55000 க்கும் அதிகமானோர் தேர்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது சுமார் 60,000 பேர் வரை அல்லது அதற்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. வகை வாரியான TNPSC குரூப் 2 கட் ஆஃப் 2019 கீழே கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி மற்றும் தரவரிசை பற்றிய யோசனையைப் பெற தேர்வர்கள் இந்த அட்டவணையைப் பார்க்கலாம்.

TNPSC குரூப் 2 கட் ஆஃப் 2019
வகை         ஆண்         பெண்
பொது           161             158
கி.மு             159             157
எம்பிசி          156             154
கி.மு.(எம்)    151             148
எஸ்சி            153             150
எஸ்சி(ஏ)       149            142
எஸ்.டி            144            140

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!