TNPSC புதியமுறையில் குரூப் -2 தேர்வு

0
TNPSC new syllabus
TNPSC new syllabus
TNPSC புதியமுறையில் குரூப் -2 தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) கீழ் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-ஐஐ (நேர்முகத் தேர்வு பதவிகள்(குரூப்-2) மற்றும் நேர்முகத் தேர்வு  அல்லாத பதவிகள் (குரூப்-2 ஏ))-இன் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் இப்போது புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த மாற்றங்கள் என என்பதையும் அதற்கான விளக்கங்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுளோம். அது குறித்த ஒரு விரிவான விளக்கம கீழே கொடுத்துளோம். அதனை பபடித்து பயன் பெறுமாறு விண்ணப்பதாரர்களை அறிவுறுத்துகிறோம் .

மொழித்தாள் நீக்கம்:

  • மொழித்தாள்கள் யாவும் நீக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் மொழித்தாள்கள் பிரிவினை தாண்டி பொது அறிவு பிரிவுகளே தற்போதய சூழலில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுவே அனைத்து விதமான அடிப்படை அறிவுகளையும் வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. ஆகவே அது சார்ந்த கேள்விகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை:

  • குரூப்-2 முதல்நிலைத் தேர்வு மற்றும் குரூப்-2ஏ-க்கு கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 100 வினாக்கள் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழிப்பாடப் பகுதியில் இருந்து கேட்கப்பட்டன. மீதம் உள்ள 100 வினாக்களில் 75 வினாக்கள் பொதுஅறிவு பகுதியில் இருந்தும், 25 வினாக்கள் நுண்ணறிவுத் திறன் (Aptitude and Mental Ability) பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டன.
  • தற்போது மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதால், பொது அறிவு பகுதியில் இருந்து 175 வினாக்களும், நுண்ணறிவுத் திறன் பகுதியில் இருந்து 25 வினாக்களும் கேட்கப்படவுள்ளன. இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி அதிகார பூர்வ வலைதளத்தில் (//www.tnpsc.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு அதை மட்டும் பயின்றாலே நிச்சயம் வெற்றி பெற முடியும். முதல்நிலைத் தேர்வு, கொள்குறி வினாக்கள் வடிவிலும், முதன்மைத் தேர்வு விரிவாக எழுதும் தேர்வாகவும் நடத்தப்படவுள்ளது. அதையடுத்து குரூப்-2 பணியிடங்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

முதல்நிலைத் தேர்வு:

  • முதல்நிலைத் தேர்வுக்கு,  பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்திய புவியியல் அமைப்பு, இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள், தமிழக நிர்வாக அமைப்பு, நுண்ணறிவுத் திறன் என 10 அலகுகளாகப் பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தில் இருந்து கொள்குறி வினா வடிவில் கேள்விகள் கேட்கப்படவுள்ளன.

முதன்மைத் தேர்வு:

  • முதன்மைத் தேர்வில், தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் ஆகிய இரண்டும் சேர்ந்துள்ள பகுதிக்கு மட்டும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க  குறிப்பில் இருந்து விரிவாக்கம், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல், அலுவல் சார்ந்த கடிதம் வரைதல் ஆகியவை உள்ளன. இரண்டாவது பகுதி முழுவதையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மட்டுமே எழுத வேண்டும்.
  • அலுவல் சார்ந்த கடிதம் வரைதல் தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளுக்கும் பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பகுதிகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி படித்து பயிற்சி பெறும்போது, மொழிபெயர்த்தல் எளிதாகிவிடும். தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தாலும், 10 நாள்கள் பயிற்சி எடுத்தால் அவை மிகவும் எளிதாகத் தெரியும். அத்துடன், நாளிதழ்களில் வரும் செய்திகளை, ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒரே செய்தி எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை படித்தும் பயிற்சியைத் தொடங்கலாம்.

புதிய பாடத்திட்ட மாற்றங்கள்:

திருக்குறள்:

  • உலகப் பொதுமறை (திருக்குறள்), மனித வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, அதிலுள்ள தத்துவக் கோட்பாடுகள், உலகுக்கு திருக்குறள் கூறும் தத்துவங்கள், தகவல் உள்ளிட்டவை குறித்தே கேள்விகள் கேட்கப்படும்.
  • அதனால் 1,330 குறள்களையும் படிக்க வேண்டும் என்று அச்சமடையாமல், திருக்குறளின் சாராம்சங்களைப் பயில்வது போதுமானதாக இருக்கும். திருக்குறளின்  சில சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும்போது, அதற்கு தேவையான குறள்களை எடுத்துக்காட்டாகக் கூறினால் மட்டும் போதும்.

நேர்முகத் தேர்வு

  • குரூப்-2 தரத்தில் உள்ள சில பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.  இதில், போட்டித் தேர்வர்கள், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்பது மட்டுமே முக்கியமாக சோதிக்கப்படும். அதுமட்டுமன்றி, முதன்மைத் தேர்வுக்கு பின்னர், நேர்முகத்தேர்வுக்கு தயாராவதற்கு போதிய கால அவகாசம் இருக்கும்.
தேவையற்ற அச்சத்தையும், குழப்பத்தையும் நீக்கிவிட்டு, பாடத்திட்டத்தில் முழுகவனம் செலுத்தி தேர்வுக்கு தயாராகுங்கள்…பரீட்சைக்கு நேரமாச்சு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!