டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் எழுந்த புது குழப்பம் – கடும் கோவத்தில் தேர்வர்கள்!

0
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் எழுந்த புது குழப்பம் - கடும் கோவத்தில் தேர்வர்கள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வில் ஆங்கில வழியில் தேர்வெழுதியவர்களே தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

குரூப் 2 தேர்வில் குழப்பம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2, 2A பிரிவின் கீழ்வரும் அரசுப் பதவிகளுக்கு தகுதியான நபர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இத்தேர்வானது முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என மூன்று பிரிவுகளாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும். இந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வின் முடிவுகள் 2024 ஜனவரி அன்று வெளியிடப்பட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட தேர்வு முடிவின் படி ஆங்கில வழியில் தேர்வெழுதிய நபர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? ஈஸியாக படிக்க வேண்டுமா… அப்போ இத உடனே பண்ணுங்க!!!

மேலும் தமிழ் வழியில் தேர்வெழுதிய நபர்கள் குறைந்தளவே தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும், தமிழ்நாட்டில் தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி ஏளனமாக பார்க்கிறதா? என்றும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது குற்றம் சாட்டி உள்ளார்கள். இது இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த ஆண்டும் நடைபெற்றுள்ளது எனவும் தேர்வர்கள் கூறுகிறார்கள். எனவே கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழ் வழியே எழுதியோர் மற்றும் ஆங்கில வழியில் எழுதியோர் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!