TNPSC 5831 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – விரைவில் வெளியாகுமா? குரூப் 2 எதிர்பார்ப்புகள்!

0
TNPSC 5831 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - விரைவில் வெளியாகுமா? குரூப் 2 எதிர்பார்ப்புகள்!
TNPSC 5831 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - விரைவில் வெளியாகுமா? குரூப் 2 எதிர்பார்ப்புகள்!
TNPSC 5831 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – விரைவில் வெளியாகுமா? குரூப் 2 எதிர்பார்ப்புகள்!

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையில் பிப்ரவரி மாதத்தில் குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குரூப் 2, 2A தேர்வு

தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இதில் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2,2ஏ,குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பின் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

ககிசோ ரபாடா முதல் டேவிட் மில்லர் வரை – IPL மெகா ஏலத்தில் பங்கேற்கும் 33 தென் ஆப்ரிக்க வீரர்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது தொற்று பரவல் குறைந்த சூழலில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும் அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 2,2ஏ பணியிடத்தில் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் அறிவிப்பு வெளியாகும் போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. கொரோனா பரவலால் 2 ஆண்டு காலமாக அரசு போட்டித் தேர்வு நடைபெறாமல் இருப்பதால் போட்டி தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது குரூப் 2,2ஏ தேர்வு பற்றிய கல்வி தகுதி, வயது வரம்பு, பதவிகள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

கல்வித்தகுதி

குரூப் 2,2ஏ தேர்வுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பதவிகள்:

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

வயது

குரூப் 2 பதவிகளுக்கு பொது பிரிவினராக இருந்தால் 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்கலாம். ஆனால் பிற வகுப்பை சேர்ந்தவர்கள் 40 வயது வரை உள்ளவராக இருக்கலாம். அத்துடன் ஒரு சில பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது தகுதி மாறுபாடும்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

குரூப் 2 காலிப்பணியிடம் – 101
குரூப் 2A காலிப்பணியிடம் – 5730

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!