TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – தேர்வு தேதி, தகுதி,ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022
TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022

TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – தேர்வு தேதி, தகுதி,ஊதியம் & முழு விவரங்களுடன்..!

TNPSC எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வு குறித்து வெளியான அறிவிப்பில் மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கு கல்வித்தகுதி, வயது, ஊதியம், தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் போன்ற முழு தகவல்களையும் மிக எளிமையாக இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். குரூப் தேர்வுகளுக்காக காத்திருப்பவர்கள் இப்பதிவை முழுமையாக படித்து, இப்பதிவின் இறுதியில் கொடுத்துள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் TNPSC Group 2 & Group 2A
பணியிடங்கள் 5529
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2022 – 23.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கான அறிவிப்பில், கீழ்கண்டவாறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Group 2 தேர்வுக்கு – 116
  • Group 2A தேர்வுக்கு – 5413 என மொத்தமாக 5529 பணியிடங்கள் உள்ளது.
TNPSC Group 2 & 2A EXAM கல்வித் தகுதிகள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group 2 & Group 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma / BA / BSc / BCom / BOL / BBA / BLitt / BBM / BGL / MCom / MA போன்ற ஏதேனும் ஒரு Bachelor’s degree அல்லது Technical qualification அல்லது Master’s degree களில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

All TNPSC Notification 2022

குறிப்பாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேவையான அல்லது குறிப்பிட்டுள்ள டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

TNPSC Group 2 & 2A EXAM வயது விவரங்கள்:
  • TNPSC Group 2 & Group 2A தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள படி பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் மாறுபட்டுள்ள வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அவை,
  • Sub-Registrar Grade- II பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Probation Officer in the Prison Department பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Probation Officer in the Social Defence Department பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 26 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • இவை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேலும் TNPSC Group 2 & Group 2A பதவிகளுக்கான வயது தளர்வுகள் குறித்த முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறியலாம்.
TNPSC Group 2 & 2A EXAM ஊதிய விவரங்கள்:
  • Industrial Co-operative Officer (Industries and Commerce Department) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-19 ன் படி குறைந்தபட்சம் ரூ.7,200/- முதல் அதிகபட்சம் ரூ.1,17,600/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • Grade-II Sub Registrar, Assistant Inspector of Labour (Labour Department), Probation Officer (Prison Department), Junior Employment Officer (Employment and Training Department) (Non- Differently Abled) மற்றும் Probation Officer (Social Defence Department) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-18ன் படி குறைந்தபட்சம் ரூ.36,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,600/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • Grade-II Municipal Commissioner, Special Assistant (Vigilance and Anti-corruption Department), Assistant Section Officer Cum Programmer in TNPSC, (Finance Department in Secretariat) – Assistant Section Officer, (Tamil Nadu Legislative Assembly Secretariat) – Assistant Section Officer, Assistant Section Officer in TNPSC மற்றும் (Law Department in Secretariat)- Assistant Section Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-16 ன் படி குறைந்தபட்சம் ரூ.36,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,15,700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • Assistant Inspector in Local Fund Audit Department, Audit Inspector (Audit Wing of Hindu Religious & Charitable Endowments Administration Department), Supervisor of Industrial Co-operatives, (Industries and Commerce Department), (Handlooms & Textiles Department) -Handloom Inspector, (Department of Registrar of Co-operative Societies)- Senior Inspector of Co-operative Societies, (Milk Production and Dairy Development Department) – Senior Inspectors மற்றும் Supervisor / Junior Superintendent (Tamil Nadu Agricultural Marketing / Agricultural Business Department) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-11 ன் படி குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • Audit Assistant (Accounts Branch of Highways & Rural Works Department) மற்றும் Executive Officer, Grade-II in Town Panchayats Department பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-08 ன் படி குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • Revenue Assistant (Revenue Department) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக Level-10 ன் படி குறைந்தபட்சம் ரூ.20,600/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

TNPSC Group 2 & 2A தேர்வு முறை:

TNPSC Group 2 & Group 2A தேர்வுக்கு கீழ்காணும் முறையில் தேர்வு செய்யும் முறை நடைபெறும்.

TNPSC Group 2 (Interview Posts) தேர்வு:

  • Preliminary Exam
  • Main written Exam
  • Interview / Personality Test

TNPSC Group 2A (Non-Interview Posts) தேர்வு:

  • Written Test
TNPSC Group 2 & 2A தேர்வு தேதி:

TNPSC Group 2 & Group 2A தேர்வுக்கான Preliminary Exam ஆனது 21.05.2022 ம் தேதியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

TNPSC கட்டண விவரங்கள்:
  • விண்ணப்பக்கட்டணம் – ரூ.150/-
தேர்வு கட்டணம்:
  • Preliminary தேர்வு – ரூ.100/-
  • Main தேர்வு – ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை:
  • TNPSC ன் Group 2 மற்றும் Group 2A தேர்விற்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ தளத்தில் இத்தேர்வுகளுக்கு என கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • Group 2 & Group 2A தேர்வுக்கு 23.02.2022 ம் தேதி முதல் 23.03.2022ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download TNPSC Group 2 & 2A Notification PDF

Direct Apply Online Link

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!