TNPSC குரூப் 2 விடைக்குறிப்பு & மதிப்பெண்கள் 2022 – தேர்வு எழுதியோர் கவனத்திற்கு..!

0

TNPSC குரூப் 2 விடைக்குறிப்பு & மதிப்பெண்கள் 2022 – தேர்வு எழுதியோர் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது மே 21 Group 2 & Group 2A தேர்வு நடத்த திட்டமிட்டது அதன்படி தற்போது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், இதற்கான தேர்வு விடைக்குறிப்பு பற்றி முழு விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். தேர்வர்கள் இப்பதிவின் மூலம் முழு விவரங்களை தெரிந்து கொண்டு பயனடையவும்.

குரூப் 2 தேர்வு விடைக்குறிப்பு:

TNPSC எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வு காலி பணியிடம் குறித்த தகவல் வெளியானது. இதில் Group 2 தேர்வுக்கு 116 பணியிடங்கள் மற்றும் Group 2A தேர்வுக்கு 5413 பணியிடங்கள் என மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்தது. இந்த அரசு போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 23.02.2022 ம் தேதி மூலம் 23.03.2022 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

Exams Daily Mobile App Download

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்து அதற்காக தங்களை தயார்படுத்தி வந்தனர். மேலும் TNPSC Group 2 & Group 2A தேர்வுக்கான Preliminary Exam ஆனது 21.05.2022 ம் தேதியில் நடைபெறும் என்று தெரிவித்தது. அதன்படி, தற்போது TNPSC Group 2 & Group 2A தேர்வுகள் சரியாக நடந்து முடிந்த நிலையில், அநேகர் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் 5 ஆம் தேதியில் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் TNPSC வெளியிட்ட அறிவிப்பின் படி, Mains exam ஆனது September 20 ல் நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த TNPSC Group 2 & Group 2A Prelims தேர்வுக்கான விடைக்குறிப்பு (Answer Key) விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விடைக்குறிப்பு வெளியானதும் எங்கள் வலைதளத்தின் மூலம் தேர்வர்கள் எளிமையாக விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

TNPSC  Group 2 & 2A Exam Answer key

TNPSC Group 2 Expected Cutoff Marks 2022: Check Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!