TNPSC Group 2, 2A தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – தாலுகா வாரியாக தேர்வு மையம் இல்லை!

0
TNPSC Group 2, 2A தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் - தாலுகா வாரியாக தேர்வு மையம் இல்லை!
TNPSC Group 2, 2A தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் - தாலுகா வாரியாக தேர்வு மையம் இல்லை!
TNPSC Group 2, 2A தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – தாலுகா வாரியாக தேர்வு மையம் இல்லை!

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள், அரசு துறைகளில் காலியாக உள்ள 5,529 பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 2, 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கு தாலுகா வாரியாக தேர்வு மையம் அமைக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேர்வர்கள் அதிக அதிர்ச்சியில் உள்ளனர்.

ஷாக் நியூஸ்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,529 பணியிடங்களை நிரப்பும் வகையில் இத்தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்க இருக்கிறது. தமிழக அளவில் இத்தேர்வை சுமார் 17 லட்சம் பேர் எழுத உள்ளனர் .அதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது.இந்த குரூப்-2 தேர்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை வருவாய்த்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

திருப்பூர் மாவட்டத்தில் இந்த தேர்வு 57 பள்ளி, கல்லூரிகள் உட்பட 69 மையங்களில் நடக்கிறது. மேலும் இந்த மாவட்டத்தில் தேர்வு பணிகளை கண்காணிக்க, துணை கலெக்டர் நிலை அதிகாரிகள் அடங்கிய, 11 ‘மொபைல் டீம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் அடங்கிய, 10 பறக்கும் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்வு பணிகளை கண்காணிக்க, 72 வீடியோ கேமரா மேன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வருவாய் ஆய்வாளர் நிலையில், தேர்வு பணிகளை கண்காணிக்க சூப்பர்வைசராக 120 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வருடந்தோறும் போட்டித்தேர்வு நடக்கும் போது தேர்வு மையங்கள் தாலுகா வாரியாக அமைக்கப்படுவது வழக்கம் ஆகும். இருப்பினும் நாளை மறுநாள் நடைபெற உள்ள குரூப்-2 தேர்வுக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் தாலுகாவில் மட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

LPG கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு – வேதனையில் இல்லத்தரசிகள்!

உடுமலை பகுதியில், தேர்வு மையம் அமைக்கப்படாதது, திருப்பூர் மாவட்ட தேர்வர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இது குறித்து வருவாய் துறை அதிகாரி கூறியது, மொத்தம், 57 பள்ளி, கல்லுாரிகளில், தேர்வு நடக்க உள்ளது. குரூப் -4 தேர்வுக்கு மட்டுமே, தாலுகா வாரியாக தேர்வு நடக்கும்; குரூப்-2 தேர்வுக்கு, விண்ணப்பம் செய்தவர் எண்ணிக்கை, இருப்பிடத்தை பொறுத்து, அரசுப்பணியாளர் தேர்வாணையமே தேர்வு மையங்களை தேர்வு செய்து அளிக்கிறது. எனவே தேர்வாணையத்தின் வழிகாட்டுதலின்படி போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். இத்தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here