TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – இன்று வெளியாகும் உத்தேச விடைகள்!

0

TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – இன்று வெளியாகும் உத்தேச விடைகள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசுத்துறைகளில் 5529 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிலையில் குரூப் 2, 2A தேர்வுக்கான உத்தேச விடைகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

உத்தேச விடைகள்:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5529 பணியிடங்களுக்காக குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு மே 21( சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 11 ,78,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் தேர்வை சுமார்  9.94 லட்சம் பேர் எழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை. இந்த தேர்வு முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தனத்தின் பிறந்த நாளை சர்பிரைஸாக கொண்டாட திட்டமிடும் குடும்பம் – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

பொதுவாக, தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 நாட்களுக்குள் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் குரூப் 2/2A எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகள் இன்று வெளியாகும் என்று தகவல்கள் கூறுகிறது. இதன் அடிப்படையில் தேர்வர்கள் உத்தேச விடைகளுக்காக காத்து கொண்டு உள்ளனர். இந்த தேர்வில் பல கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், ஒரு சில கேள்விகள் தவறாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்த டிஎன்பிஎஸ்சி,  தவறான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் கேள்விகள், மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது. ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோல் சர்ச்சைகள் எழுவது இயல்பு தான் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. மேலும் உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை, 7 நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘Answer Key Challenge’ என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம். மேல்முறையீடு தொடர்பான கோரிக்கைகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் POST வழியாகவோ, mail வழியாகவோ பெறப்படாது என்று TNPSC தெளிவுபடுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!