2015 குரூப் 1 முறைகேடு – பணியில் உள்ளவர்கள் மீது வழக்குப்பதிவு ??

0
2015 குரூப் 1 முறைகேடு - பணியில் உள்ளவர்கள் மீது வழக்குப்பதிவு
2015 குரூப் 1 முறைகேடு - பணியில் உள்ளவர்கள் மீது வழக்குப்பதிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு நடத்திய குரூப் 1 முறைகேடு தொடர்பாக தற்போது பணியில் உள்ள 60 அரசு அதிகாரிகள் மீது டிஎன்பிஎஸ்சி வழக்கு தொடர்ந்து உள்ளது.

2015ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் பெருமளவு முறைகேடு நடைபெற்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக தற்போது பணியில் உள்ள 60 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

குரூப் 1 தேர்வு மொத்தம் 75 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் சென்னையில் உள்ள இரண்டு மையங்களில் இருந்து மட்டும் 65க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் தற்போது டிஎஸ்பி மற்றும் சப் கலெக்டர் போன்ற பணிகளில் உள்ளனர்.

குரூப் 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு தொடர தமிழக உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதனால் தற்போது பதவியில் உள்ள பல அதிகாரிகள் சிக்குவர் என கூறப்படுகிறது.

வீடியோவினை பெற … கிளிக்

இது போன்ற பல்வேறு தகவல்களை பெற எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!