TNPSC Group 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

0
TNPSC Group 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ..! TNPSC Group 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சற்றுமுன் Group 1 Mains தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. Group 1 தேர்வு எழுதிய தேர்வர்கள் இப்பதிவின் மூலம் முழு விவரங்களை தெரிந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

தேர்வு முடிவுகள் வெளியீடு:

TNPSC எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் COMBINED CIVIL SERVICES-I EXAMINATION (GROUP I SERVICES) தேர்வுகள் மூலம் Tamil Nadu Civil Service, Tamil Nadu Police Service, Tamil Nadu Commercial Taxes Service, Tamil Nadu Co-operative Service, Tamil Nadu Panchayat Development Service மற்றும் Tamil Nadu Fire and Rescue Services ஆகிய துறைக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான Group 1 தேர்வுக்கு 04.03.2022, 05.03.2022 மற்றும் 06.03.2022 தேதி அன்று Mains தேர்வு நடைபெற்றது.

நடந்து முடிந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது TNPSC அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் Oral Test குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.  Group 1 Mains தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் தேர்வு முடிவுகளை எளிமையாக தெரிந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம். மேலும் இதனை தொடர்ந்து வெளியான அறிவிப்பில்  Oral Test நடைபெறும் தேதி விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

13.07.2022, 14.07.2022 மற்றும் 15.07.2022 ஆகிய தேதிகளில் Oral Test நடைபெறும் என்றும் TNPSC அறிவித்துள்ளது. Group 1 Mains தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த நபர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள இந்த Oral Test ல் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடையவும். இந்த தேர்வானது Tamil Nadu Public Service Commission, TNPSC Road, and Chennai – 600003 என்ற முகவரியில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

TNPSC Group 1 Results PDF – Click here

Download Oral Test Schedule PDF

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here