TNPSC தகுதி தேர்வுக்கு தயாரகுபவரா நீங்கள்? – இதோ உங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு பற்றிய தகவல்!

0
TNPSC தகுதி தேர்வுக்கு தயாரகுபவரா நீங்கள்? - இதோ உங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு பற்றிய தகவல்!
TNPSC தகுதி தேர்வுக்கு தயாரகுபவரா நீங்கள்? - இதோ உங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு பற்றிய தகவல்!
TNPSC தகுதி தேர்வுக்கு தயாரகுபவரா நீங்கள்? – இதோ உங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு பற்றிய தகவல்!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் TNPSC Group-1 தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச பயிற்சி வகுப்பை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பு குறித்த அனைத்து தகவல்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group-1 இலவச பயிற்சி வகுப்பு:

தமிழ் நாடு முழுவதும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்புகள் பெற்றுத் தரப்பட்டு வருகிறது. மேலும் இந்த அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும், அரசு வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆனது TNPSC Group-1 தேர்வுக்கு பதிவு செய்து தற்போது இந்த தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் TNPSC Group-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பானது ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கீழ் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பானது அலுவலக வளாகத்தில் 29.08.2022 அன்று முதல் தொடங்கப்பட்டு வாரம் முழுவதும் உள்ள வேலை நாட்களில் அதாவது ஒரு வாரத்திற்கு 6 நாட்கள் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) நடைபெற உள்ளது. இந்த வகுப்பானது காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள ராணிப்பேட்டை மாவட்ட சேர்ந்த நபர்கள் தங்களது பதிவை அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

TNPSC Group-1 இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் கூடுதல் தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல் அலுவலகம், தலைமை தபால் நிலையம் அருகில், ராணிப்பேட்டை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமோ தெரிந்து கொள்ளலாம். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டிய மாதிரி வினாத்தாள்கள், குறிப்புகள் மற்றும் இலவச இணையவழி மாதிரி தேர்வு ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.

Official Website link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!