TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள்!

0
TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள்!
TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள்!
TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள்!

குரூப் 4 VAO தேர்வுகள் குறித்த தகவல்களை TNPSC தேர்வாணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதனை தொடர்ந்து குரூப் 4 VAO தேர்வுகளுக்கு உதவும் வகையில் பாடத்திட்டம், கட் ஆஃப், தகுதிகள் போன்றவற்றை விரிவாக பார்க்கலாம்.

குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு பணிகளுக்காக TNPSC தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக TNPSC நடத்தும் குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி தாளில் 40 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தாள் மட்டும் இருக்குமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் குறித்த தகவல்களை TNPSC தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. தற்போது குரூப் 4 அதிக போட்டியாளர்களை கொண்டுள்ளது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு உதவியாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!

ஏனெனில் குரூப் 4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தால் போதுமானது. மேலும் 300 மதிப்பெண்கள் கொண்ட ஒரே ஒரு எழுத்து தேர்வினை கொண்டது. அத்துடன் நேர்முகத் தேர்வு இப்பதவிகளுக்கு கிடையாது. மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஏராளமான நபர்கள் குரூப் 4 தேர்வுக்கு தயார்படுத்தி கொண்டு வருகின்றன. எனவே குரூப் 4 தேர்வு மிகுந்த போட்டியாளர்களை கொண்டதாக இருக்கும்.

இத்தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணியிடங்களில் பணி புரியலாம். குரூப் 4 தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தால் போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாடத்திட்டம்

தற்பொழுது மொழிப்பாடப்பிரிவில் ஆங்கில மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிப்பாடபிரிவில் 100 வினாக்கள் கேட்கப்படுகிறது. அடுத்ததாக பொது அறிவு பகுதிகளில் 100 வினாக்கள் கேட்கப்படும். அதில் 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு வினாக்களும் கேட்கப்படும். கீழ்க்கண்ட தலைப்புகளில் இருந்து பொது அறிவு வினாக்கள் கேட்கப்படுகின்றன.

அறிவியல் : இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்

நடப்பு நிகழ்வுகள் : வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்.

புவியியல் : புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள்.

வரலாறு : சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள் தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு.

இந்திய அரசியல் : அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ்.

பொருளாதாரம் : ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி.

இந்திய தேசிய இயக்கம் : தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு.

திறனறி வினாக்கள் : தர்க்க அறிவு மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல், எண்ணியல், கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர், சராசரி, சதவீதம், விகிதம் மற்றும் விகித சமம், மீ.பெ.வ, மீ.சி.ம , தனிவட்டி, கூட்டுவட்டி , அளவியல் பாடங்களில் பரப்பளவு மற்றும் கன அளவு , வேலை மற்றும் நேரம் , வேலை மற்றும் தூரம், வயது கணக்குகள் , இலாபம் மற்றும் நட்டம், வடிவியல், இயற்கணிதம்.

கட் -ஆஃப்

குரூப் 4 தேர்வை மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். ஆனால் வேலை கிடைக்க வேண்டுமென்றால் காலியிடங்களின் எண்ணிக்கைக்குள் வரும் அளவுக்கு தகுந்த மதிப்பெண்கள் பெற வேண்டும். அதன்படி கடந்த ஆண்டுகளில் பொதுப் பிரிவில் 164 வினாக்கள் சரியாக எழுதியவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதனால் 165 வினாக்களுக்கு மேல் சரியாக இருந்தால் வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும். மேலும் இன ரீதியான பிரிவு வாரியாக இந்த கட் –ஆஃப் மதிப்பெண் ஏற்ற இறக்கங்கள் கொண்டு இருக்கும். அதனால் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!