TNPSCயில் 1000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் – சம்பளம்: ரூ.71900/- || விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27 கடைசி நாள்!

0
TNPSCயில் 1000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் - சம்பளம்: ரூ.71900/- || விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27 கடைசி நாள்!
TNPSCயில் 1000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் - சம்பளம்: ரூ.71900/- || விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27 கடைசி நாள்!
TNPSCயில் 1000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் – சம்பளம்: ரூ.71900/- || விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27 கடைசி நாள்!

Field Surveyor மற்றும் Draftsman பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி இங்கு மொத்தம் 1089 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27 கடைசி நாள் என்பதால் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Field Surveyor & Draftsman வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Field Surveyor in Survey and settlement wing – 794*+4 c/f பணியிடங்கள், Draftsman in Survey and settlement wing – 236 பணியிடங்கள், Surveyor-cum-Assistant Draughtsman – 55* பணியிடங்கள் என மொத்தம் 1089 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும்.
  • Field Surveyor பதவிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ (அல்லது) தேசிய தொழிற்பயிற்சி கவுன்சிலால் வழங்கப்படும் சர்வேயர் வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) மெட்ராஸ் இன்ஜினியரிங் குழுமத்தால் வழங்கப்பட்ட ராணுவ வர்த்தக சர்வேயர் (புலம்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Draftsman பதவிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ (அல்லது) தொழில் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலில் வழங்கப்பட்ட வரைவாளர் (சிவில்) வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) மெட்ராஸ் இன்ஜினியரிங் குழுமத்தால் வழங்கப்பட்ட ராணுவ வர்த்தக வரைவாளர் (புலம்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Surveyor-cum Assistant Draughtsman பதவிக்கு இந்திய அரசு, தொழிலாளர் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட, ஜூலை 1952 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் டிராஃப்ட்ஸ்மேன் ஷிப் (சிவில்) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) தலைவர், தொழில்நுட்ப சோதனை வாரியம், மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் மற்றும் சென்டரால் வழங்கப்பட்ட ராணுவ வர்த்தக வரைவாளர் (புலம்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) கைவினைஞர் பயிற்சி மையத்தால் வழங்கப்படும் வரைவாளர் (சிவில்) சான்றிதழ் (அல்லது) சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு பதிவு கட்டணமாக ரூ.150/-யும் தேர்வுக் கட்டணமாக ரூ.100/-யும் செலுத்த வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் ஒரே கட்டமாக எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் . எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், நியமனங்கள் இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு தேர்வு செய்யப்படும். எழுத்து தேர்வானது 06.11.2022 அன்று காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. அதன் பின் மாலை 02.00 மணி முதல் 05.00 மணி வரை நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27 கடைசி நாள் என்று முன்னதாக அறிவித்தது. அதன் படி, இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!