தமிழகத்தில் டிரைவர் & கண்டக்டர் பணிகளுக்கு TNPSC தேர்வுகள்? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் டிரைவர் & கண்டக்டர் பணிகளுக்கு TNPSC தேர்வுகள்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் டிரைவர் & கண்டக்டர் பணிகளுக்கு TNPSC தேர்வுகள்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் டிரைவர் & கண்டக்டர் பணிகளுக்கு TNPSC தேர்வுகள்? அமைச்சர் விளக்கம்!

தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலைகளில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இனி TNPSC வாயிலாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் அளித்துள்ளார்.

TNPSC போட்டித்தேர்வுகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தி ஆட்சேர்ப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு குரூப் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் மாதத்தில் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் இனி அரசு போக்குவரத்துக்கழகங்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களுக்கும் TNPSC தேர்வுகள் நடத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதாவது, சென்னையின் அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பணிமனைகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர், ‘தமிழகத்தில் இனி அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கான காலிப்பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகவே நிரப்பப்படும். ஏனென்றால், பொது மக்களிடம் இருந்து எனக்கு வரும் மனுக்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் வேலைவாய்ப்பு கோரிக்கையை முன் நிறுத்துகிறது. இந்த சூழலில் பணியில் இருக்கும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பலர் பணிக்கு வராமல் இருப்பது, நிர்வாகத்திற்கு பெரிய இழப்பு என்பதை உணர வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள் கிடைக்கவுள்ளதா? மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு!

அதே போல நீண்ட நாட்கள் பணிக்கு வராமல் இருப்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள்’ என்று பேசியுள்ளார். தற்போதுள்ள சூழலில் போக்குவரத்துக் கழகங்கள் சுமார் 48,500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கினாலும் தமிழக அரசு மகளிருக்கு இலவச கட்டணங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. இதனால் அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மகளிரிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!