TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து TNPSC தேர்வாணையம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. TNPSC நடத்தும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு ஜூன் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிர்வாக காரணத்தால் ஜூலை 2ம் தேதிக்கு இத்தேர்வினை தேர்வாணையம் மாற்றப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வு தேதி

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 32 வகையான தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இத்தேர்வு 626 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் PM Kisan திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – கிரெடிட் கார்டில் ரூ.3 லட்சம் கடன்!

இதற்கு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் ஆட்டோமொபைல் பொறியாளர் பதவிகளுக்கு ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் 5 ஆண்டுகால பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதே போல் ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் பதவிகளுக்கு புரொடக்ஷன் இன்ஜினியரிங் அல்லது இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் அல்லது டெக்ஸ்டைல் டெக்னாலஜி உள்ளிட்டவைகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற  TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று வருகிற மே 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு வருகிற ஜூன் 26 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணமாக இத்தேர்வு வருகிற ஜூலை 2ம் தேதி காலை அன்று நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு தேதி மாற்றம் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here