TNPSC தேர்வு மையங்களில் மாற்றம் – கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி!

0
TNPSC தேர்வு மையங்களில் மாற்றம் - கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி!
TNPSC தேர்வு மையங்களில் மாற்றம் – கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி!

தமிழகத்தில் சமீபத்தில் கலவரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் வரும் 24ம் தேதி நடக்கவிருக்கும் குரூப் 4 & VAO தேர்வுக்கு மையங்கள் முன்னதாக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பள்ளியை ஆய்வு செய்ததில் வகுப்புகள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் TNPSC தேர்வாணையம் மாற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குரூப் 4 & VAO தேர்வு:

தமிழகத்தில் குருப் 4 பிரிவில், ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சு செய்பவர் (டைப்பிஸ்ட்) ஸ்டெனோ டைப்பிஸ்ட், கள ஆய்வாளர் மற்றும் வரையாளர், விஏஒ பிரிவில், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு 7,382 காலிப் பணியிடங்களுக்கு வரும் 24ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. இத்தேர்வு எழுத மாநிலம் முழுவதும் பல தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதே போல தற்போது கலவர சம்பவம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அப்பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவிக்கு நீதி கேட்டு பொதுமக்களும், மாணவியின் பெற்றோரும் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் பள்ளி வகுப்பறைகள் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இருக்கைகள், மேசைகள் போன்றவை போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டது. அதனால் அப்பள்ளியில் குரூப் 4 தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தீவிரமடையும் கொரோனா, மாநிலத்தில் வரும் 24-ந் தேதி வரை பள்ளிகள் மூடல் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு

இந்தப் பள்ளியில் ஆய்வு செய்து, வகுப்பறைகள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து கள்ளக்குறிச்சி சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒதுக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது கள்ளக்குறிச்சி வட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 900 தேர்வர்கள் மற்றும் ஏ.கே.டி. நினைவு வித்யா சாகத் பள்ளியில் 300 தேர்வர்களுக்கும் தேர்வு எழுத அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ஹால்டிக்கெட் தேர்வாணையத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என குரூப் 4 தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here