TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!

0
TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!

தமிழகத்தில் TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வுகள் மற்றும் நேரடி முறையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து TNPSC தேர்வு வாரியம் சில தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியாகும் என்று TNPSC தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டில் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இத்தகைய தேர்வு அறிவிப்புகளை பெரும்பாலானோர் எதிர்பார்த்து தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் கீழ் செயல்படும் மாநில தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் SSC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்பட்ட பயிற்சி வகுப்புகள் வரும் ஜன.10ம் தேதி நேரடியாகவும், இணையவழியாகவும் தொடங்க உள்ளது.

Post office இல் உள்ள சிறப்பான திட்டங்கள் – 2 மடங்காக கிடைக்கும் முதலீடு!

இந்த TNPSC தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ள forms.gle/2cqJjvv8jiLxXphe7 Vpfs என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் SSC தேர்வுக்கான பயிற்சியில் இணைய விரும்புபவர்கள் forms.gle/2EsNxbGNGXdgQxdg6 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சி வகுப்புகளின் போது மாதிரி தேர்வுகள் மற்றும் மாதிரி நேர்காணல் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் முதன்மை செயல் அலுவலர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!