TNPSC வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.71,900 சம்பளத்தில் வேலை! தமிழ் தெரிந்தால் போதும்!

0
TNPSC வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ.71,900 சம்பளத்தில் வேலை! தமிழ் தெரிந்தால் போதும்!
TNPSC வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ.71,900 சம்பளத்தில் வேலை! தமிழ் தெரிந்தால் போதும்!
TNPSC வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.71,900 சம்பளத்தில் வேலை! தமிழ் தெரிந்தால் போதும்!

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள Executive Officer Grade IV பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 18 ஆம் தேதி தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தகுதி தேர்வினை நடத்தி தகுதியான பணியாளர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து கொண்டிருக்கிறது. தற்போது Executive Officer Grade IV பணியிடம் குறித்தான முக்கிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. Executive Officer Grade IV பணிக்கு மொத்தமாக 36 காலிபணியிடங்கள் உள்ளன.

Exams Daily Mobile App Download

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் படித்திருக்கும் விண்ணப்பதாரர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ் புலவர் என்கிற பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியான நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது 37 வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேர்வாகும் ஊழியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரைக்கும் மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC தேர்வாணையத்தின் அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும் மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தான் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 18 ஆம் தேதி தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!