TNPSC 151 துறைத்தேர்வுகள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

0
TNPSC 151 துறைத்தேர்வுகள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
TNPSC 151 துறைத்தேர்வுகள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
TNPSC 151 துறைத்தேர்வுகள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கடந்த 01.02.2022 முதல் 09.02.2022 வரை 151 துறை தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தியது. இதில் 122 தேர்வுகளின் உத்தேச விடைகள் (Tentative Keys) அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC துறை தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக 151 துறைத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளானது கடந்த 01.02.2022 முதல் 09.02.2022 வரை சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் தற்போது 122 தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் (Tentative Keys) அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி உத்தேச விடைகளை பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது வெளியாகியுள்ள உத்தேச விடைகளில் ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் விண்ணப்பதாரர்கள் அதனை ஒரு வாரத்திற்குள் (18.02.2022 முதல் 24.02.2022) தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மறுப்பு தெரிவிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், மற்றும் சரியான விடைக்கு ஆதாரம் முதலியவற்றை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடிதம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Answer Key Notice

Download Tentative Keys

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!