TNPSC துறைத்தேர்வு அறிவிப்பு டிசம்பர் 2022 – வெளியீடு || விண்ணப்பிக்கும் அனைத்து விவரங்களுடன் !

0
TNPSC துறைத்தேர்வு அறிவிப்பு டிசம்பர் 2022 - வெளியீடு || விண்ணப்பிக்கும் அனைத்து விவரங்களுடன் !
TNPSC துறைத்தேர்வு அறிவிப்பு டிசம்பர் 2022 - வெளியீடு || விண்ணப்பிக்கும் அனைத்து விவரங்களுடன் !

TNPSC துறைத்தேர்வு அறிவிப்பு டிசம்பர் 2022 – வெளியீடு || விண்ணப்பிக்கும் அனைத்து விவரங்களுடன் !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது டிசம்பர் 2022 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் பிற முறைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே அனைத்து விவரங்களையும் அறிந்து 21.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission
பணியின் பெயர் Departmental Examinations – DEC 2022
தேர்வு தேதி 12.12.2022 – 21.12.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC Departmental Exam 2022 விவரங்கள்:

அரசு பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் (பொது கல்வி தகுதி தேர்வு தவிர) துறைத் தேர்வுகள் பொதுவானவையாகும். மேலும் இந்த தேர்வானது டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது.

துறைத் தேர்வு வயது வரம்பு:

துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இவ்வறிக்கை நாளன்று 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

TNPSC Departmental Exam விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் ரு.200/- தேர்வு கட்டணமாகவும், பதிவு கட்டணமாக ரு.30/- ம் சேர்த்து இணையவழி செலுத்தும் முறையில் அதாவது இணையவங்கி / பற்று அட்டை / கடன் அட்டை முறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையில் மட்டுமே ஆன்லைன் முறையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

TNPSC தேர்வு மையம்

விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தின் தலைநகரில் தான் தேர்வு எழுத வேண்டும். வேறு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டுமெனில் அதற்கு தேர்வாணையத்தின் தனிப்பட்ட அனுமதி பெற வேண்டும். இந்த நிபந்தனை பணியில் இல்லாதவர்களுக்கும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் பொருந்தாது.

TNPSC Departmental Test தேர்வு கால அட்டவணை:

முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடங்கும், விண்ணப்பதாரர்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 9.00 மணிக்கும் பிற்பகல் தேர்வுக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வுகூடத்திற்குள் வருகை புரிய வேண்டும். தேர்வுகள் தொடங்கிய பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் அதாவது முற்பகல் 9.30 மணிக்கு பிறகும் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் எவரும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

TNPSC Departmental Test தேர்வு:

Objective Type in Computer Based Test தேர்வுகள் 12.12.2022 முதல் 16.12.2022 வரையிலும் நடைபெற உள்ளது. அதேபோல் Descriptive Type தேர்வுகள் 17.12.2022 முதல் 21.12.2022 வரை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த துறை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 23.09.2022 முதல் 21.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

Download Time Table

Download Syllabus

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!