TNPSC துறைத்தேர்வர்கள் கவனத்திற்கு – கணினி வழி தேர்வு! ஆதார் எண் கட்டாயம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் அனைத்து கணினி வழியில் தேர்வுகளுக்கும் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
TNPSC தேர்வு
சமீப காலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகளில் ஆதார் எண் கட்டயாமாக்கப்பட்டு வருகிறது. அதிலும் மாணவர்களுக்கான பொது தேர்விலும் கூட சில சமயங்களில் ஆதார் அட்டைகள் கேட்கப்படுகிறது. இதற்கு மத்தியில் அரசுப் போட்டித்தேர்வுகளை எழுதுவதற்கு ஆதார் அட்டைகள் அவசியமா என போட்டியாளர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Jio vs Airtel சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் – விலை ஏற்றத்திற்கு பின்! பயனர்கள் கவனத்திற்கு!
இது தொடர்பாக TNPSC சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் அப்ஜெக்டிவ் வகையிலான கணினி வழி தேர்வு மற்றும் துறைத்தேர்வுகள் இந்த ஆண்டு மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அவர்களது ஆதார் எண்ணை விண்ணப்பத்துடன் பதிவு செய்திருக்க வேண்டும்.
இப்போது 2020 டிசம்பர் மாதத்திற்கான துறைத்தேர்வுகள் 01.02.2022 முதல் 09.02.2022 வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 21.12. 2021 அன்று பிற்பகல் 11.59 மணிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் கொள்குறி வகை தேர்வுகள் அனைத்தும் (100% மாக அதாவது 40%/ 60 %/ 80%) கணினி வழி முறையில் நடைபெறும். அதே போல அனைத்து விரிந்துரைக்கும் வகை தேர்வுகளும் (100% மாக அதாவது 20%/ 40 % / 60 %) வழக்கமான முறையின் படி எழுத்து தேர்வாக நடைபெறும்.
தமிழகத்தில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி? உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
இப்போது வணிகவரித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் TNPSC இணையதளத்தில் இணைப்பு IIல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் துறைத்தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்களின் பாடத்திட்டம், தேர்வு முறை, பெயர், குறியீடு, கட்டணம், கால அட்டவணை மற்றும் தேர்வு விதிமுறைகள் ஆகியவற்றை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ மற்றும் www.tnpscexams.net ஆகிய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.