TNPSC DCPO 2022 வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு, கட்டணம் & விண்ணப்ப முறை விளக்கம்!

0
TNPSC DCPO 2022 வேலைவாய்ப்பு - தகுதி, வயது வரம்பு, கட்டணம் & விண்ணப்ப முறை விளக்கம்!
TNPSC DCPO 2022 வேலைவாய்ப்பு - தகுதி, வயது வரம்பு, கட்டணம் & விண்ணப்ப முறை விளக்கம்!
TNPSC DCPO 2022 வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு, கட்டணம் & விண்ணப்ப முறை விளக்கம்!

தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி (DCPO) பணியில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான தகுதி, வயது வரம்பு, கட்டணம், விண்ணப்ப முறை விவரங்களை இப்பதிவில் காணலாம்.

TNPSC தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு TNPSC சார்பில் குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட 32 வகையான போட்டித்தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் சமூகப் பாதுகாப்புத் துறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி (DCPO) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை TNPSC வரவேற்றுள்ளது.

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏப்ரல் 30 வரை விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது DCPO பதவிக்கான தேர்வுகள் காலை 9.30 முதல் மதியம் 12.30 வரையும் (தேர்வு 1), பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் (தேர்வு 2) இரண்டு ஷிப்டுகளாக ஜூன் 19ஆம் தேதியன்று நடத்தப்பட உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை இப்போது பார்க்கலாம்.

தேர்வு: ஜூன் 19

வயது வரம்பு:

பொது பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதேசமயம் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு பொருந்தாது.

கல்வித் தகுதி:

பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் சமூகவியல், சமூகப் பணி அல்லது உளவியல், குழந்தை மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.150 மற்றும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in திறக்கவும்.
  • அதில் பதிவு செய்ய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கவும்.
  • இப்போது புதிய பயனராக இருந்தால் புதிய ஐடியை உருவாக்க உருவாக்க, ‘புதிய பயனர்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து முகப்பு பக்கத்தில் உள்ள, ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்’ என்பதை தேர்வு செய்யவும்.
  • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்யவும்.
  • அதில் உள்நுழைந்து விண்ணப்ப செயல்முறையை தொடரவும்.

ஆவணங்களை பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்கவும்
எதிர்கால குறிப்புக்கு ஒரு பிரிண்ட்அவுட் எடுக்கவும்.

தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தேர்வு செயல்முறை:

  • இரண்டு தொடர்ச்சியான நிலைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தேர்வு 1 – கணினி அடிப்படையிலான சோதனை முறை
    நேர்காணல் – வாய்வழி சோதனை.
  • CBT தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் நியமனங்களின் இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தேர்வு செய்யப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!