TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் Combined Statistical Subordinate Services Examination பதவிகளுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அது பற்றிய முழு விவரங்களையும் தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC CSSSE சான்றிதழ் சரிபார்ப்பு தேதி:

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் புள்ளியியல் உதவியாளர் மற்றும் குடும்ப நலத்துறையில் வட்டார சுகாதார புள்ளியலாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வானது 11.01.2022 அன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்‌ மற்றும்‌ தரவரிசை விவரங்கள்‌ 22.03.2022 TNPSC இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

மேற்கண்ட பணியிடங்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை நடைபெற உள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும்‌ மருந்து நிர்வாகத்‌ துறையில்‌ புள்ளியியல்‌ உதவியாளர்‌ மற்றும்‌ குடும்ப நலத்துறையில்‌ வட்டார சுகாதார புள்ளியலாளர்‌ பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை-03, தேர்வாணையச்‌ சாலை (பிராட்வே பேருந்து நிலையம்‌ மற்றும்‌ கோட்டை ரயில்‌ நிலையம்‌ அருகில்‌) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில்‌ நடைபெற உள்ளது.

TNPSC Forest Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download

பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்த்தடுப்பு மருந்துத்‌ துறையில்‌ கணக்கிடுபவர்‌ மற்றும்‌ தடுப்பூசி பண்டகக்‌ காப்பாளர்‌ பதவிக்கான சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கான அறிவிப்பு பின்னர்‌ வெளியிடப்படும்‌. விண்ணப்பதாரர்களின்‌ மதிப்பெண்கள்‌ / ஓட்டுமொத்த தரவரிசை எண்‌, இடஒதுக்கீட்டு விதி மற்றும்‌ காலிப்பணியிடங்களின்‌ அடிப்படையில்‌, தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வர்களின் பட்டியல்‌ கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள்‌ மேற்படி மூலச்சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கு வர தவறினால்‌ அவர்களுக்கு, மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும்‌ TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC CSSSE Counselling Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!