TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

0
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கை துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் மூலமாக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்தில் குறைவான அளவில் காலிப்பணியிடங்கள் உள்ளதால் விண்ணப்பத்தார்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இப்பணிக்கு விண்ணப்பிக்க எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் இதில் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணிக்கு நியமிக்கப்படுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 56,100 முதல் 1,77,500 லட்ச ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையத்தள பதிவு செய்யலாம்.

இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது. ஆனால் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இதற்கு தேர்வு கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது. ஆனால் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (பிப்.21) கடைசி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை  பெற https://www.tnpsc.gov.in/Document/english/2022_02_AD_Cooperative%20Audit_Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!