TNPSC இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவுத் துறை வேலைவாய்ப்பு – பிப்.21 கடைசி நாள்!

0
TNPSC இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவுத் துறை வேலைவாய்ப்பு - பிப்.21 கடைசி நாள்!
TNPSC இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவுத் துறை வேலைவாய்ப்பு - பிப்.21 கடைசி நாள்!
TNPSC இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவுத் துறை வேலைவாய்ப்பு – பிப்.21 கடைசி நாள்!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவுத் துறைகளில் காலியாக உள்ள உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை மற்றும் செயல் அலுவலர் நிலை – I இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

TNPSC, அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகின்றன. இந்த தேர்வு அடிப்படையில் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவு தணிக்கை துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வகையில் உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director of Co-operative Audit) பணியில் 8 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு நியமன செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ. 56,100 – 1,77,500 ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – ரூ.100 இருந்தால் எளிதாக கணக்கு தொடங்கலாம்!

இந்த வகையில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணிக்கு எழுத்துத் தேர்வு 30.04.2022 அன்று நடைபெறும். இதனை தொடர்ந்து செயல் அலுவலர் நிலை – I இந்து சமய அறநிலையத்துறை (Executive Officer Grade – I) பணிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 01.07.2022 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் சட்டம் படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கபடுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.37,700 – 1,19,500 வழங்கப்படும்.

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் பருவ தேர்வு குறித்த தகவல்கள்!

இந்த பணிக்கு எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 23.04.2022, 24.04.2022 ஆகும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்கலாம், இருப்பினும் ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை மற்றும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு. மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 21.02.2022 ஆகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!