TNPSC தேர்வெழுத தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள்!

0
TNPSC தேர்வெழுத தயாராகி வருவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவுறுத்தல்கள்!
TNPSC தேர்வெழுத தயாராகி வருவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவுறுத்தல்கள்!
TNPSC தேர்வெழுத தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள்!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு தேர்வாணையம் முக்கிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.

TNPSC தேர்வுகள்:

தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு நடத்தப்படும் TNPSC போட்டித் தேர்வுகள் கொரோனா தாக்கம் காரணமாக 2 வருடங்களாக நடைபெறவில்லை. இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான தேர்வு கால திட்டத்தினை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கின் போதும் இ-பாஸ் இருந்தால் அனுமதி | அரசு விளக்கம்!

மேலும் தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் TNPSC தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வர்களுகான அறிவுரைகள்:
  • தேர்வர்கள்‌ விடைத்தாளில்‌ விவரங்களை பூர்த்தி செய்யவும்‌ விடைகளை குறிக்கவும்‌ கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்‌ தவறினால்‌ அவ்வாறான விடைத்தாள்கள்‌ தேர்வாணையத்தால்‌ செல்லாததாக்கப்படும்‌.
  • எந்த ஒரு தேர்வரும்‌ முற்பகலில்‌ நடைபெறும்‌ தேர்விற்கு 09.15 மணிக்குப்‌ பின்னர்‌ தேர்வுக்கூடத்திற்குள்‌ நுழையவோ 1.15 மணிக்கு முன்னர்‌ தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌.
  • எந்த ஒரு தேர்வரும்‌ பிற்பகலில்‌ நடைபெறும்‌ தேர்விற்கு 2.15 மணிக்குப்‌ பின்னர்‌ தேர்வுக்கூடத்‌இற்குள்‌ நுழையவோ 5.15 மணிக்கு முன்னர்‌ தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

  • விண்ணப்பதாரர்கள்‌ தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம்‌ அமைந்துள்ள இடத்தினை எளிதில்‌ தெரிந்துகொள்ளும்‌ பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்‌சீட்டில்‌, விரைவுத்தகவல்‌ குறியீடு (QR CORD) அச்சிடப்பட்டுள்ளது.
  • விரைவுத்தகவல்‌ குறியீட்டு செயலி மூலம்‌ ஸ்கேன்‌ செய்து தேர்வுக்கூடம்‌ அமைந்துள்ள இடத்தனை Google Maps மூலமாக தெரிந்து கொண்டு பயன்‌ பெறலாம்‌.
  • தேர்வு அறைக்குள்‌ அலைபேசி மற்றும்‌ வேறு ஏதேனும்‌ மின்னணு உபகரணங்கள்‌ கொண்டு செல்ல அனுமதியில்லை.

எனவே விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில்‌ உள்ள குறிப்பின்படி தங்களது அலைபேசி உட்பட பிற உடமைகளை தேர்வுமையத்திலுள்ள பாதுகாப்பு அறையில்‌ ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இருப்பினும்‌ சொந்த உடமைகளை பாதுகாப்பு அறையில்‌ வைப்பது தேர்வரின்‌ சொந்த பொறுப்பிற்குட்பட்டதாகும்‌.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!