TNPSC 5000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!

0
TNPSC 5000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் தகவல்!
TNPSC 5000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் தகவல்!
TNPSC 5000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!

TNPSC குரூப்2,2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்பத் திருத்தம் செய்யும் போது மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை, கூடுதல் சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TNPSC குரூப்2 & 2A :

தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் TNPSC போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை உள்ளிட்ட 33 வகை பதவிகளுக்கான குரூப்2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் மார்ச் 23ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மே 21ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – Fake News கண்டுபிடிப்பது எப்படி?

இதனையடுத்து தற்போது தேர்வர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.இந்த மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் படிவத்தில் திருத்தம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பத் திருத்தம் செய்பவர்கள் மீண்டும் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பத்தில் திருத்தம் செய்பவர்கள் முதலில் நிரந்தரப் பதிவில் திருத்தம் செய்ய வேண்டும். கூடுதல் சந்தேகங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 18004190958 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு முதல் TNPSC தேர்வாணையம் தேர்வு முறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!