TNPSC போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நிபந்தனைகள் வெளியீடு!

1
TNPSC போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு முக்கிய அறிவிப்பு - நிபந்தனைகள் வெளியீடு!
TNPSC போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு முக்கிய அறிவிப்பு - நிபந்தனைகள் வெளியீடு!
TNPSC போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நிபந்தனைகள் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு இதில் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. அதன்படி தமிழை முதல் தகுதித் தேர்வாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் TNPSC தேர்வுகளில் பங்கேற்போருக்கான நிபந்தனைகளை இப்பதிவில் காணலாம்.

TNPSC அறிவிப்பு:

தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது தோராயமானதாகும். மேலும், அவை மாறுதலுக்குட்பட்டதாகும்.

ஒரேநிலை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் நடைபெறும் எழுத்துத்தேர்வுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் தெரிவுகளில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது தெரிவின் எந்த நிலையிலும், அதாவது கொள்குறிவகைத் தேர்வு / விரிந்துரைக்கும் வகை தேர்வு முடிவுகள் வெளியாகும். முன்னரோ அல்லது கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரோ மாறுதலுக்குட்பட்டதாகும்.

ஒரேநிலையில் நடைபெறும் எழுத்துத் தேர்வுடன் கூடிய நேர்முகத்தேர்வின் அடிப்படையிலோ அல்லது அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிலையில் நடைபெறும் எழுத்துத் தேர்வுடன் கூடிய நேர்முகத்தேர்வின் அடிப்படையிலோ நடத்தப்படும் தெரிவுகளில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது தெரிவின் எந்த நிலையிலும், அதாவது கொள்குறிவகை எழுத்துத் தேர்வு/ விரிந்துரைக்கும்வகை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரோ / நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரோ / நேர்முகத்தேர்வு முற்றிலும் நிறைவடைவதற்கு முன்னரோ மாறுதலுக்குட்பட்டதாகும்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – NEET, JEE நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி!

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்படுகின்ற பொழுது, தேர்விற்கான அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட விகிதாச்சாரத்தின்படி, அடுத்தடுத்த நிலைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும். எனினும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் உயர்வு, எந்தவொரு நிலையிலும், அதற்கு முந்தைய நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

தேர்விற்கு விண்ணப்பிக்கும் முன்னால் / தேர்வு எழுதுவதற்கு முன்னால், தேர்வாணைய அறிவிக்கை நாளன்று, அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது, கல்வித்தகுதி, இலவச கட்டண வாய்ப்புகளின் எண்ணிக்கை தொடர்பான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து, தேர்வுக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருப்பதை விண்ணப்பதாரர் உறுதி செய்துகொள்ள வேண்டும். தேர்வின் அனைத்து நிலைகளுக்கும் விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவது, விண்ணப்பதாரர் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்குட்பட்டதும் முற்றிலும் தற்காலிகமானது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre – Join Now

இணையவழி விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரால் அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, விண்ணப்பதாரர் கோரும் பிறந்த தேதி, கல்வித்தகுதி, தொழில்நுட்ப கல்வித்தகுதி, பணி முன் அனுபவம், சமூகப்பிரிவு, இருப்பிடம், விருப்பப்பாடம், தேர்வு எழுத தெரிவு செய்யப்பட்ட மொழி (விரிந்துரைக்கும் வகைத் தேர்வு), சிறப்பு பிரிவுகளான, தமிழ் வழியில் கல்வி பயின்றோர் / நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் / முன்னால் இராணுவத்தினர் / ஆதரவற்ற விதவைகள் முதலியன ஏற்றுக்கொள்ளப்படும். மேற்குறிப்பிட்ட தகவல்களை தேர்வாணையம் ஐயமறத் தெரிந்து ஏற்றுக்கொள்ளும் வரை, விண்ணப்பதாரரின் விண்ணப்பம் தாற்காலிகமாகவே ஏற்கப்படும். எழுத்து தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்முகத்தேர்வு / கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவது அல்லது தெரிவு செய்யப்பட்டோர் பட்டியலில் தற்காலிகமாக விண்ணப்பதாரரின் பெயர் சேர்க்கப்படுவதால், ஒரு விண்ணப்பதாரர் பதவி நியமனம் பெற உரிமை அளிக்கப்பட்டவராக மாட்டார். எனவே விண்ணப்பதாரரின் விண்ணப்பம் எல்லா நிலைகளிலும் தற்காலிகமானது மற்றும் விண்ணப்பதாரரால் அளிக்கப்பட்ட விவரங்கள் தவறு என்றாலோ, தேர்வாணைய அறிவுரைகள் அல்லது விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டாலோ, எந்நிலையிலும், தெரிந்தெடுக்கப்பட்ட பின்னர் கூட, விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை தேர்வாணையத்திற்கு உண்டு.

இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பதாரரால் கோரப்படும் உரிமைகோரல் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பதாரர், அவ்வப்போது தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு தேர்வுக்கும், தனித்தனியே இணையவழியில் விண்ணப்பத்தினை, விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளுக்கிணங்க சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 VAO 209 காலிப்பணியிடங்கள் – அக்.11 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை இணையவழியாக சமர்ப்பிக்கும் போது, ஆவணங்களையோ அல்லது இணையவழி விண்ணப்பங்களின் நகலையோ தேர்வாணைய அலுவலகத்திற்கு அனுப்பத் தேவையில்லை. எனினும் விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தில் / ஒருமுறை பதிவில் கீழ்காணும் உரிமைகோரல்களுக்கு ஆதாரமாக கோரப்படும் தகவல்களான சான்றிதழ் எண், சான்று வழங்கும் அலுவலர் மற்றும் சான்று வழங்கிய நாள் போன்ற விவரங்களை கட்டாயம் அளிக்க வேண்டும். அளிக்கத் தவறினால், பின்னர் அதற்கான உரிமைகோர முடியாது.

  • சமூகப்பிரிவு / வகுப்பு.
  • கல்வித்தகுதி
  • தமிழ் வழியில் கல்வி பயின்றோர்.
  • ஆதரவற்ற விதவை.
  • முன்னால் இராணுவத்தினர்.
  • நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளி.
  • மூன்றாம் பாலினத்தவர்.
  • மருத்துவ/ வழக்கறிஞர் மன்ற பதிவு.
  • ஓட்டுநர் உரிமம், போன்றவைகள்

நியமனத்துக்கு போட்டியிட தகுதியுடையவர் என தேர்வாணையத்தால் கருதப்படும் விண்ணப்பதாரர், தேர்வாணையத்தால் அழைக்கப்பட்டால், சென்னை அல்லது மாநிலத்தின் பிற மையங்களுக்கு தனது சொந்த செலவில் வருவதற்கு தயாராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர் ஒருவரை தேர்வாணையம் தேர்ந்தெடுப்பதால் மட்டுமே அவர் அரசுத் துறையில் பணி நியமனம் பெற உத்தரவாதமளிப்பதாகாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. * மாநில அரசானது,தமது மக்களுக்கு நன்றாக புரிந்து அவ்வாறு செயல்படும்படி அறிக்கை வெளியிடுவதே சிறப்பு! இதை விடுத்து,குழப்புவதும் குளறுபடி ஏற்படுத்துவதும் ஜனநாயகத்தில் பிறந்த அரசுக்கு அழகல்ல ! நடைமுறையில் வழக்கத்திலுள்ள வார்த்தைகளை பயன்படுத்தி அறிக்கைகளை வெளியிடவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!