TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

4
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் வெளியீடு!
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் வெளியீடு!
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் கடந்த 2019ம் ஆண்டு கலந்து கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் நடக்க உள்ள நிலையில், அதனை பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் – 4 பணியிடங்கள்:

TNPSC குரூப் – 4 தகுதியின் கீழ் உள்ள கிராம நிா்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் போன்ற 7 வகையான பணியிடங்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரித்தது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2020 பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதற்கட்ட கலந்தாய்வின் போது மொத்தம் 5,798 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. ஆனால் 209 இளநிலை உதவியாளா் பணியிடங்கள் நிரப்பவில்லை.

அக்.6 முதல் 17ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – தசரா பண்டிகை எதிரொலி!

தற்போது இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான காலியிடங்களின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கான முக்கிய தகவல்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை எண், இட ஒதுக்கீடு விதி மற்றும் பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

குரூப் 4 கலந்தாய்வு குறித்த தகவல்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். தனியாக அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்படாது. இந்த கலந்தாய்விற்கு அழைக்கப்படும் அனைவரும் அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான எந்த உறுதியும் இல்லை. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!