TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

0
TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!
TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!
TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

TNPSC தேர்வாணையம் தற்போது Assistant Public Prosecutor, Grade-II தேர்வு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு பயனடையலாம்.

தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு வெளியீடு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 25.08.2021 அன்று வெளியிட்ட Notification No.10 /2021 என்கிற அறிவிப்பில் Assistant Public Prosecutor, Grade-II பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 24.09.2021 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு அநேகர் விண்ணப்பித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து Preliminary தேர்வு 06.11.2021 அன்று நடந்து முடிந்து அதற்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது TNPSC Main தேர்வு தேதி மற்றும் அதற்கான நுழைவு சீட்டு (Hall Ticket) வெளியிட்டுள்ளது.

TN’s Best Coaching Center

Assistant Public Prosecutor, Grade-II பணியின் Preliminary தேர்வில் தேர்ச்சியானவர்கள் மட்டும் Press Release No: 30/2022 அறிவிப்பின் படி, 07.05.2022(FN & AN) மற்றும் 08.05.2022 (FN & AN) அன்று சென்னை தேர்வு மையத்தில் நடைபெறும் Main தேர்வில் கலந்து கொள்ள முடியும். எனவே இதற்கு காத்திருக்கும் தேர்வர்கள் தேர்வு எழுத தேவையான நுழைவு சீட்டை (Hall Ticket) இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் எளிமையாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சரியாக தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Exam Date Notification PDF

TNPSC Hall Ticket Download Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!