TNPSC உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,05,700/- || விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!

0
TNPSC உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.2,05,700/- || விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!
TNPSC உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.2,05,700/- || விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!
TNPSC உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,05,700/- || விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. இந்த தமிழக அரசு பணிக்கு என 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. M.A அல்லது B.A பட்டப்படிப்பு படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் 14.12.2022 வரை வரவேற்கப்படுகின்றன என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின், இதற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே 20.01.2023 க்குள் தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:

Assistant Professor of Psychology–cum-Clinical Psychologist பதவிக்கு என 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பதவிக்கான தேர்வானது கணினி அடிப்படையில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Psychology பாடப்பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் M.Phil அல்லது Clinical Psychology பிரிவில் Ph.D பட்டம்/ Medical Psychology/Social Psychology/Clinical Psychology ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ஆன்லைன் விண்ணப்பத்தில் 14.12.2022 வரை விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள், 15.11.2022 தேதியிட்ட அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட தகுதியுடன், மேலே குறிப்பிட்டுள்ள திருத்தப்பட்ட கல்வித் தகுதியைப் பெறாதவர்கள், மேற்படி பதவிக்கு தகுதியற்றவர்களாகி விடுவார்கள் என TNPSC தெரிவித்துள்ளது. பொது விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 ஆண்டுகள். SC, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs மற்றும் ஆதரவற்ற விதவைகள் அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100 – 2,05,700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் இனியும் கால தாமதிக்காமல் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNPSC Notification Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!