TNPSCயில் மாதம் ரூ.205700/- அரசு வேலை – விண்ணப்பிக்க ஜன.12 கடைசி நாள்!

0
TNPSCயில் மாதம் ரூ.205700/- அரசு வேலை - விண்ணப்பிக்க ஜன.12 கடைசி நாள்!
TNPSCயில் மாதம் ரூ.205700/- அரசு வேலை - விண்ணப்பிக்க ஜன.12 கடைசி நாள்!
TNPSCயில் மாதம் ரூ.205700/- அரசு வேலை – விண்ணப்பிக்க ஜன.12 கடைசி நாள்!

TNPSC மூலம் தமிழகத்தில் Group–IA சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள உதவி வனப்பாதுகாவலர் பதவியில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 12.01.2023 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு தேவையான விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:

Assistant Conservator of Forests பதவிக்கு 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Level 22 ன் படி, ரூ.56100- 205700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 31 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். SCs, SC(A)s, STs விண்ணப்பத்தார்களுக்கான அதிகபட்சமான வயது வரம்பு 39 ஆகும்.

Central Bank of India வங்கியில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பதாரர்கள் பல்வேறு பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அறிவியல் அல்லது பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க பதிவு கட்டணம் ரூ.150/- செலுத்த வேண்டும். அதன் பின், முதற்கட்ட தேர்வுக் கட்டணம் ரூ.100/-. அதில் தேர்ச்சி பெற்றவருக்கு அடுத்த கட்டமாக தேர்வு கட்டணம் ரூ.200/- செலுத்த வேண்டும். Preliminary தேர்வானது 30.04.2023 அன்று காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளதால், மேற்கண்ட தகுதிகளை உடைய ஆர்வமுள்ளவர்கள் இனியும் கால தாமதிக்காமல் உடனே தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!