TNPSC Accounts Officer பணிக்கான வேலைவாய்ப்பு 2022 – 20+காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.2,09,200/-

0
TNPSC Accounts Officer பணிக்கான வேலைவாய்ப்பு 2022 - 20+காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.2,09,200/-
TNPSC Accounts Officer பணிக்கான வேலைவாய்ப்பு 2022 - 20+காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.2,09,200/-
TNPSC Accounts Officer பணிக்கான வேலைவாய்ப்பு 2022 – 20+காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.2,09,200/-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சற்றுமுன் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Account Officer, Class III பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிக்கு என 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இந்த பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் Account Officer, Class III
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பணியிடம்:

தற்போது வெளியான TNPSC அறிவிப்பில் (Advertisement No. 618 Notification No. 14 /2022), தமிழ்நாடு மாநிலம் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் சேவை மையத்தில் காலியாக உள்ள Account Officer, Class III (Post Code No. 2093) பணிக்கு என மொத்தமாக 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Account Officer கல்வி விவரம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் Institute of Chartered Accountants / Cost Accountants என்னும் கல்வி நிறுவனத்தில் Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
Account Officer வயது விவரம்:
  • Account Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது என TNPSC-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு ஊழியர்களாக இருப்பின் 05 ஆண்டுகள், உடல் ஊனமுற்றவர்களுக்கு 10 ஆண்டுகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 18 ஆண்டுகள் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Account Officer சம்பளம்:

இந்த அரசு பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது Level 23 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.56,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு செய்யப்படும் முறை:
  • Account Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Computer Based Test ஆனது Paper 1 மற்றும் Paper II என இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வு 08.10.2022 அன்று நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.150/- பதிவுக் கட்டணம் அதாவது One Time Registration Fees ஆக செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ரூ.200/- தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

TNPSC விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் முதலில் One Time Registration செய்ய வேண்டும். ஒரு முறை Registration செய்தால் 5 வருடம் வரை அது செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • One Time Registration செய்த பிறகு விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • 13.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்க்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!