TNPSC இம்மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய 4 வேலைவாய்ப்பு தேர்வுகள் – முழு விவரம் இதோ!

0
TNPSC இம்மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய 4 வேலைவாய்ப்பு தேர்வுகள் - முழு விவரம் இதோ!
TNPSC இம்மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய 4 வேலைவாய்ப்பு தேர்வுகள் - முழு விவரம் இதோ!
TNPSC இம்மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய 4 வேலைவாய்ப்பு தேர்வுகள் – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கிய தேர்வுகளுக்கான விண்ணப்பச் செயல்முறை இந்த மாதத்தில் முடிவடைகின்றன. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக போட்டித் தேர்வு அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது தாக்கம் குறைந்து அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் TNPSC மூலம் நிரப்பப்படும் பல வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி உள்ளது. இதன்படி, தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியாளர்களை நிரப்பும் குரூப் தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022 ஆகும். இந்த தேர்வு 7304 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடைபெறுகிறது. இதை அடுத்து சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 16 ஆகும். இந்த வகையில் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தொடர்ந்து வருகிறது. மேலும் விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2022 ஆகும். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை 04.04.2022 முதல் 03.05.2022 வரை இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – DA நிலுவைத்தொகை செட்டில்மெண்ட்!

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் தேர்வுக் கட்டணம் ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு. ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனியாக விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்புகள் குறித்து கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!