TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட்ஆப் மதிப்பெண்கள் & பதவிகள் – முழு விபரங்கள் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட்ஆப் மதிப்பெண்கள் & பதவிகள் - முழு விபரங்கள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட்ஆப் மதிப்பெண்கள் & பதவிகள் - முழு விபரங்கள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட்ஆப் மதிப்பெண்கள் & பதவிகள் – முழு விபரங்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான பதவிகள், பாடத்திட்டம், வினாத்தாள் மற்றும் கட்ஆப் உள்ளிட்ட தகவல்கள் குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

TNPSC குரூப் 4 & VAO தேர்வு:

தமிழகத்தில் அரசுத்துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது TNPSC தேர்வு வாரியத்தால் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4, குரூப் 5 மற்றும் VAO உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படக்கூடிய தேர்வுகளில் மிகவும் எளிமையான மற்றும் பெரும்பாலானோர் விண்ணப்பிக்கும் தேர்வு என்றால் அது Group 4 மற்றும் VAO தேர்வுகள் ஆகும்.

Post Office NSC சேமிப்பு திட்டம் – 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

VAO பதவி குரூப் 4 தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தட்டச்சர் பதவிக்கு மட்டும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு பொதுவாக வயது வரம்பு 18 முதல் 30 வயது ஆகும்.

அரசின் விதிகளின்படி உள்ள இதர பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு. Group 4 தேர்வு மூலம் நடத்தப்படும் அனைத்து பதவிகளுக்கும் 10ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. இந்த தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். அந்த 200 வினாக்களில் 100 வினாக்கள் மொழிப்படங்களில் இருந்தும், 75 வினாக்கள் பொதுஅறிவு மற்றும் 25 வினாக்கள் திறனறி தேர்வு அடிப்படையில் கேட்கப்படும்.

தற்போது தமிழக அரசு தமிழ் மொழிப்பாடத்தில் 45 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது. தேர்வில் 75 பொது அறிவு வினாக்கள் இயற்பியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து கேட்கப்படும். தேர்வுக்கு கட் ஆப் மதிப்பெண் என்ன என்று கணித்து சொல்ல முடியாது. ஆனால் கடந்த ஆண்டு 16 மதிப்பெண் பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஊரடங்கு அமல், போக்குவரத்துக்கு தடை? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!

இந்த Group 4 தேர்வில் கலந்து கொண்டு எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் நேரடி நியமனம் செய்யப்படும். இவ்வாறு எளிய முறையில் இந்த பணி நியமனம் செய்யப்படுவதனாலேயே பெரும்பாலானோர் இந்த தேர்விற்காக காத்திருந்து விண்ணப்பித்து வருகின்றனர். பணி நியமனம் வாயிலாக மேலே குறிப்பிட்ட 7 பணியிடங்களில் ஏதேனும் உங்களுக்கு விருப்பப்பட்ட பணியை உங்களது சொந்த ஊரில் பெற்றுக்கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!