TNPSC குரூப் 4 VAO 209 காலிப்பணியிடங்கள் – அக்.11 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

2
TNPSC குரூப் 4 VAO 209 காலிப்பணியிடங்கள் - அக்.11 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு!
TNPSC குரூப் 4 VAO 209 காலிப்பணியிடங்கள் - அக்.11 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு!
TNPSC குரூப் 4 VAO 209 காலிப்பணியிடங்கள் – அக்.11 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய கடந்த 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான (குரூப் 4) இரண்டாம் கட்ட கவுன்சிலிங் அக்டோபர் 11ம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC கவுன்சிலிங்

தமிழக அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் TNPSC போட்டித்தேர்வுகள் கடந்த ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. அதாவது கொரோனா பேரலை காரணமாக இடை நிறுத்தி வைக்கப்பட்ட TNPSC தேர்வுகளை இந்த ஆண்டு முதல் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வரும் அக்டோபர் மாதத்தில் குரூப் 2, 2A மற்றும் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியிப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், விடுமுறை அறிவிப்பு – முக்கிய உத்தரவு!

அந்த வகையில் பட்டியலில் பதிவு எண்கள் உள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை TNPSC அலுவலகத்தில் வைத்து அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளம், SMS மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே கவுன்சிலிங் தேதி மற்றும் நேரம் குறித்த தனிப்பட்ட தகவலை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள இருக்கும் நபர்கள் tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதற்காக, இந்த இணையதளத்தை திறந்தவுடன் Counselling/Selection முதலில் என்பதை முதலில் கிளிக் செய்யவும். அதில், குழு IV (2018-20) பதவியில் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு ஆப்ஷனில் ’28 .09.21 JA PASE-II COUNS என்பதை கிளிக் செய்தால் ஒரு புதிய பக்கம் திறக்கும். இப்போது பட்டியல் PDF வடிவில் திறக்கும். அதன் மூலம் கலந்தாய்வு குறித்த விவரங்களை தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம். இப்போது TNPSC குழு IV தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர், கள ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட இருக்கிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

எனினும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பதாரர்கள் சேர்க்கை தற்காலிகமானது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தின் போது செய்யப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வர் கூறும் கோரிக்கைகளில் ஏதேனும் பொய்யாகவோ அல்லது தவறாகவோ இருந்தால், அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வேட்பாளர் தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறினால், அவர்களுக்கான தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படும்.

அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்பு முடிந்தவுடன், தகுதியானவர்கள் அதே நாளில் ஆலோசனைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளத் தவறிய விண்ணப்பதாரர்கள் அடுத்த தேர்வு நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். மேலும் பட்டியலில் பதிவு செய்ய தவறிய விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஆலோசனைக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

மத்திய அரசின் சம்பளம், PF, ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு – புதிய ஊதியக் குறியீடு!

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு உத்தரவாதம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த TNPSC குரூப் 4 ஆட்சேர்ப்பு மூலம், மொத்தம் 209 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம், சென்னை அல்லது மதுரை கிளை நீதிமன்றத்தின் கோப்புகளில் நிலுவையில் உள்ள OA கள் மற்றும் WP களில் ஏதேனும் இருந்தால் அதன் முடிவுகளுக்கு உட்பட்டு மீண்டும் வேட்பாளர்கள் சேர்க்கை செய்யப்படுகிறது. இந்த குறிப்பிட்ட ஆட்சேர்ப்பு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!