TNPESU பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
TNPESU பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
TNPESU பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
TNPESU பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ( TNPESU ) தற்போது படித்து முடித்த பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, காலியிடம், விண்ணப்ப கட்டணம் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (TNPESU) தமிழக அரசால் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் பொது விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை TNPESU வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (TNPESU) உடற்கல்வி, யோகா, உடற்பயிற்சி உடலியல் மற்றும் ஊட்டச்சத்து, மேம்பட்ட விளையாட்டுப் பயிற்சி உள்ளிட்ட சில பதவிகளுக்கான ஆட்சேர்ப்புகளை நடத்த இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் சுமார் 8 பதவிகளில் காலியாக இருக்கும் 14 பணியிடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் டிப்ளமோ, ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பு, M,Phil, MBA ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 ஊதியமாக வழங்கப்படும்.

தமிழகத்தில் ஜூலை 4 முதல் ஸ்டிரைக் – ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு அறிவிப்பு!

இந்த ஆட்சேர்ப்புக்கான தேர்வு முறை எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் நடத்தப்படும். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக SC/ST/ PWBD விண்ணப்பதாரர்கள் ரூ.250 மற்றும் மற்ற பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.500 என்ற தொகையை செலுத்த வேண்டும். இறுதியாக, விண்ணப்பதாரர்கள் TNPESU பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று, அதனை பூர்த்தி செய்து, பல்கலைக்கழகத்தின் முகவரிக்கு தபால் மூலமாக 08.07.2022 தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!