TNMSCL மருத்துவ சேவைகள் கழகத்தில் வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.56,100..!

0

TNMSCL மருத்துவ சேவைகள் கழகத்தில் வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.56,100..!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSCL) கடந்த சில தினங்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில் Accounts Officer, Assistant Accounts Officer பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே தகுதி உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு, அதன்பின் எளிமையான முறையில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மருத்துவ சேவை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் (TNMSCL) காலியாக உள்ள Accounts Officer மற்றும் Assistant Accounts Officer பணிக்கு என தலா 01 இடம் விதம் மொத்தமாக 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Commerce பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவராகவும், Chartered Accountants of India -வில் Member ஆக இருப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • Assistant Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Commerce பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Bachelor’s , Master Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Accounts Officer, Assistant Accounts Officer பணிகளுக்கு அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் Accounts துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Accounts Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் Level 22 படி குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Assistant Accounts Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் Level 20 படி குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
TNMSCL விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவு செய்து கொள்ளலாம். பின் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல் உடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 09.05.2022 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால், நாளைக்குள் (09.05.2022) இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையவும்.

TNMSCL Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!