தமிழகத்தில் தமிழ் தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் (TNHRCE) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Typist, Watchman, Ticket Sellers, Thoorvai & Cleaner ஆகிய பணிகளுக்கு என்று தற்போது 66 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Arulmigu Ramanathaswamy Temple (TNHRCE) |
பணியின் பெயர் | Typist, Watchman, Ticket Sellers, Thoorvai & Cleaner |
பணியிடங்கள் | 66 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Typist, Watchman, Ticket Sellers, Thoorvai & Cleaner ஆகிய பணிகளுக்கு என்று தற்போது 66 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
TNHRCE கல்வித் தகுதி:
- Typist, Watchman, Ticket Sellers, Thoorvai & Cleaner ஆகிய பதிவுகளுக்கு கீழுள்ளவாறு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Typist & Ticket Sellers பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Typist பணிக்கு விண்ணப்ப தாரர்கள் கட்டாயம் தட்டச்சு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக Computer Application and Office Automation போன்றவற்றில் Certificate Course முடித்திருக்க வேண்டும்.
- Watchman, Thoorvai, Cleaner ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்கு ஏழுத படிக்க தெரிந்தால் போதுமானதாகும்.
TNHRCE வயது வரம்பு:
01.02.2022 அன்றைய தினத்தின் படி, 18 வயது பூர்த்தியடைந்தவர்கவும், 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNHRCE ஊதிய தொகை:
- Typist & Ticket Sellers பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணியின்போது மாத ஊதியமாக ரூ.18,500/- முதல் ரூ.58,600/- வரை வழங்கப்படும்.
- Watchman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணியின்போது மாத ஊதியமாக ரூ.15,900/- முதல் ரூ.50,400/- வரை வழங்கப்படும்.
- Thoorvai, Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணியின்போது மாத ஊதியமாக ரூ.10,000/- முதல் ரூ.31,500/- வரை வழங்கப்படும்.
TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test அலல்து Interview மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேர வேண்டும்.