8 ஆம் வகுப்பு படித்தவருக்கான அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
8 ஆம் வகுப்பு படித்தவருக்கான அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
8 ஆம் வகுப்பு படித்தவருக்கான அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
8 ஆம் வகுப்பு படித்தவருக்கான அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் Office Assistant பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 25.04.2022 என்பது இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், பணி பற்றிய முழுமையான விவரங்கள் மிக எளிமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Tirupuur)
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலைய துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு என 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.

Office Assistant வயது வரம்பு:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 32 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் MBC/ DNC/ BC பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு நிலை 1-ன் படி குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

TNHRCE தேர்வு செய்யும் முறை:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தை 25.04.2022 கடைசி நாள் மாலை 5.30 மணிக்குள் அலுவலகம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயில் வளாகம்,
திருப்பூர் – 641 604.

TNHRCE Notification Link

TNHRCE Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!