தமிழக அரசில் பணி புரிய அரிய வாய்ப்பு – 8ம் வகுப்பு முடித்திருந்தால் அலுவலக உதவியாளர் ஆகலாம்..!

0
தமிழக அரசில் பணி புரிய அரிய வாய்ப்பு - 8ம் வகுப்பு முடித்திருந்தால் அலுவலக உதவியாளர் ஆகலாம்..!
தமிழக அரசில் பணி புரிய அரிய வாய்ப்பு - 8ம் வகுப்பு முடித்திருந்தால் அலுவலக உதவியாளர் ஆகலாம்..!
தமிழக அரசில் பணி புரிய அரிய வாய்ப்பு – 8ம் வகுப்பு முடித்திருந்தால் அலுவலக உதவியாளர் ஆகலாம்..!

திருச்சி மாவட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNHRCE Tiruchirappalli
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNHRCE பணியிடங்கள்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு 9 பணியிடங்கள் மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

TNHRCE கல்வித் தகுதி:
  • அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நல்ல உடற்தகுதி வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம்.
TNHRCE வயது வரம்பு:

அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயதானது, பொது பிரிவினருக்கு 32 வயது என்றும், BC, MBC, DNC விண்ணப்பதாரர்களுக்கு 34 வயது என்றும், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது என்றும், வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

TNHRCE ஊதிய விவரம்:

அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- என்றும் மாத ஊதியம் பெறுவார்கள்.

TNHRCE தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களை இணைத்து இறுதி நாளான 30.04.2022 ம் தேதி மாலை 50.30 மணிக்குள் வந்து சேரும் படி தபால் அனுப்ப கேட்டுக் கொள்கிறோம்.

TNHRCE Notification pdf

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!