தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழக கோவில்களில் வேலைவாய்ப்பு 2021 !!

0
தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழக கோவில்களில் வேலைவாய்ப்பு 2021 !!
தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழக கோவில்களில் வேலைவாய்ப்பு 2021 !!

தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழக கோவில்களில் வேலைவாய்ப்பு 2021 !!

சென்னையின் திருவேற்காடு, பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் உட்பட மூன்று கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள தகுதியானவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பில் அர்ச்சகர், ஓதுவார் உட்பட பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. தகுதியுடையோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Priest, Oduvar, Nathaswaram, Thavil, Madappalli, Gardener, Assistant Electrical Worker, Tamil Puluvar, Animal Caretaker & Other Posts
பணியிடங்கள் 21
கடைசி தேதி 10.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் 2021 :

அர்ச்சகர், ஓதுவார், நாதஸ்வரம், தவில், மடப்பள்ளி, தோட்டக்காரர், உதவி மின்பணி, தமிழ் புலவர், கால்நடை பராமரிப்பாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு மூன்று கோவில்களையும் சேர்த்து 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

TNHRCE வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அர்ச்சகர், ஓதுவார் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத/ தேவார பாடசாலையில் தேர்ச்சி
  • நாதஸ்வரம், தவில் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. அறநிறுவனங்கள் அல்லது அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் தேர்ச்சி
  • மடப்பள்ளி – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்
  • தோட்டக்காரர் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. தோட்டக்கலையில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • உதவி மின்பணி – அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையத்தில் எலக்ட்ரிகல் தேர்ச்சி
  • கால்நடை பராமரிப்பாளர் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. கால்நடை பராமரிப்பில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • தமிழ் புலவர் – தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பணிக்குமான தகுதிகளை அறிவிப்பின் வாயிலாக விரிவாக அறிந்து கொள்ளலாம்

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 10.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!