தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை – உடனே விரையுங்கள்..!

0
தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை - உடனே விரையுங்கள்..!
தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை - உடனே விரையுங்கள்..!
தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை – உடனே விரையுங்கள்..!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுத்துள்ளோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Namakkal வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு என 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.

  • 01.07.2021 அன்றைய நாளின் படி விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 32 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு, MBC / DNC / BC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNHRCE Namakkal விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யலாம் அல்லது அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யலாம். தற்போது இப்பணிக்காக கால அவகாசம் நாளையுடன் (22.04.2022) நிறைவடைவதால் உடனே விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here