TNHRCE வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.60,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

0
TNHRCE வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ.60,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
TNHRCE வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ.60,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!TNHRCE வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ.60,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
TNHRCE வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.60,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோயிலில் காலியாக இருக்கும் மருத்துவ பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் திருக்கோவில்களில் அர்ச்சகர் பணி முதல் அனைத்து வகையான பதவிகளுக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் தற்போது புதிதாக கட்டப்பட இருக்கும் முதலுதவி மையத்தில் மருத்துவர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இதற்காக மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பணியாளர் ஆகிய பதவிகளுக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இப்போது திருக்கோவில்களில் பணியாற்றுவதற்கு இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று TNHRCE சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்கள் தற்காலிகமானது என்றும் விண்ணப்பதாரர்கள் வரும் ஜூலை மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்ப விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 & VAO தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்!

பதவி – மருத்துவ அலுவலர்

காலியிடங்கள் – 2

கல்வித்தகுதி – MBBS

சம்பளம் – மாதம் ரூ. 60,000

பதவி – செவிலியர்

காலியிடங்கள் – 2

கல்வித்தகுதி – ஸ்டாஃப் நர்ஸ்/MLHP DGNM (பொது நர்சிங் மற்றும் நர்சிங் டிப்ளமோ)

சம்பளம் – மாதம் ரூ. 14,000

பதவி – மருத்துவமனைப் பணியாளர்

காலியிடங்கள் – 2

கல்வித்தகுதி – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் – ரூ. 6,000

வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

நேர்முகத் தேர்வு அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

விண்ணப்ப முறை :

விண்ணப்பதாரர்கள் https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/10245/497/document_1.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப பதிவை பதிவிறக்கம் செய்யவும். அதனை பிரிண்ட் அவுட் செய்து, நிரப்பி தேவையான ஆவணங்களுடன் துணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயில், பண்ணாரி, சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம் – 638401 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!