ரூ.62,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.62,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.62,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.62,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் ஓட்டுநர்‌ & இரவுக்காவலர்‌ பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

TNHRCE Dindigul வேலைவாய்ப்பு விவரங்கள்:

வெளியாகிய அறிவிப்பின் படி, திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் ஓட்டுநர்‌ மற்றும் இரவுக்காவலர்‌ பணிக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்‌ பணிக்கு 8 -ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV License வைத்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் நல்ல உடல்தகுதியுடன்‌ இருக்க வேண்டும்‌.இரவுக்காவலர்‌ பணிக்கு 8 -ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சியின்மை ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு நன்றாக மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் நல்ல உடல்தகுதியுடன்‌ இருக்க வேண்டும்‌.

TN’s Best Coaching Center

01.07.2021-ல்‌ தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்‌ என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள். இதில் ஓட்டுநர்‌ பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதரர்கள் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரையும், இரவுக்காவலர்‌ பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரையும் மாத ஊதியம் பெறுவார்கள். இந்த அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்முக தேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் இந்த பணி நியமனம்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது என்று குறிப்பிட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ 22.04.2022 அன்று மாலை 5.30 மணிக்குள்‌ கீழ்காணும்‌ ஆவணங்களின்‌ நகல்களில்‌ சான்றிட்டும்‌ புகைப்படத்துடன்‌ சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால்‌ தலை ஒட்டிய கவர்‌ ஒன்றுடன்‌ அறிவில் உள்ள முகவரிக்கு உரிய விண்ணப்பத்தில்‌ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்‌. இருப்பிட முகவரி, அஞ்சல்‌ குறியீட்டு எண்‌, கைபேசி எண்‌ ஆகியவற்றை தெளிவாகவும்‌, ஓட்டுநர்‌ பதவிக்கு விண்ணப்பம்‌ செய்வர்‌ “ஓட்டுநர்‌ என்றும்‌, கரவுக்காவலர்‌ பணியிடத்திற்கு “இரவுக்காவலர்‌” என்றும்‌ குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்‌. குறிப்பிட்டதேதிக்குள்‌ வரப்பெறாத விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலை விண்ணப்பிக்க அளிக்கப்பட கால அவகாசம் நாளை நிறைவடைவதால் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Download Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here