தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்:ரூ.75,000/-

1
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்:ரூ.75,000/-

கோவை மாவட்டம்‌, பேரூர்‌ வட்டம்‌, மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்‌. அமைக்கப்படவுள்ள முதலுதவி மருத்துவ மையத்தில்‌ மருத்துவ அலுவலர்‌ மற்றும்‌ செவிலியர்‌ பதவிகளில்‌ நியமனம்‌ செய்வதற்காக கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச்‌ சார்ந்த நபர்களிடமிருந்து 10.11.2021 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை
பணியின் பெயர் மருத்துவ அலுவலர்‌, செவிலியர்‌ மற்றும்‌ பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:
 • மருத்துவ அலுவலர்‌ – 02
 • செவிலியர்‌ – 02
 • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 02
தமிழக அரசு கல்வி தகுதி:
 1. மருத்துவ அலுவலர்‌ – MBBS Qualified under TWMSE
 2. செவிலியர்‌ – DGNM
 3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

சமய அறநிலையத்துறை சம்பள விகிதம்:
 • மருத்துவ அலுவலர்‌ – ரூ.75,000/-
 • செவிலியர்‌ – ரூ.14,000/-
 • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – ரூ.6,000/-
சமய அறநிலையத்துறை தேர்வு செயல் முறை:

வரப்பெற்ற விண்ணப்பங்கள்‌ அனைத்தும்‌ சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்‌ தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்‌. நேரடி நியமனம்‌ இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.விண்ணப்பதாரர்‌ நல்ல தேக ஆரோக்கியம்‌ உள்ளவராக இருக்க வேண்டும்‌.

நிபந்தனைகள்‌:
 1. இந்துமதத்தைச்‌ சார்ந்தவராகவும்‌ தமிழ்நாட்டை சார்ந்தவராகவும்‌ இருக்க வேண்டும்‌.
 2. தொற்றுநோய்‌ உடல்‌ அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள்‌ உள்ளவர்கள்‌ விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்‌.
 3. நீதிமன்றத்தில்‌ தண்டனை அடைந்தவர்கள்‌
 4. பட்டகடனை தீர்க்க முடியாதவர்கள்‌ என நீதிமன்றத்தில்‌ தீர்மானிக்கப்பட்டவர்கள்‌
 5. அரசுப்பணிகள்‌, பொது ஸ்தாபனங்கள்‌ மற்றும்‌ வேறு இடங்களில்‌ பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம்‌ செய்யப்பட்டவர்கள்‌. ஆகியோர்கள்‌ மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத்‌ தகுதியற்றவர்கள்‌.
 6. நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும்‌. இதற்கு அரசிதழ்‌ பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச்‌ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்‌.
தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களுக்கு கட்டணம்‌ கிடையாது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும்‌ தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும்‌ 10.11.2021-ம்‌ தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர்‌ வரப்பெறும்‌ விண்ணப்பங்களும்‌ நிராகரிக்கப்படும்‌. விண்ணப்பதாரர்கள்‌ ஒவ்வொரு பதவிக்கும்‌ அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும்‌ இதர தகுதி சான்றுகள்‌ மற்றும்‌ இதர விபரங்களுடன்‌ தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்‌. விண்ணப்பம்‌ அனுப்பப்படும்‌ மேலுறையின்‌ மீது கண்டிப்பாக பதவியின்‌ பெயர்‌ குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்‌.

விண்ணப்ப படிவம்:

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://www.tnhrce.gov.in/ என்கிற இணையதள முகவரியில்‌ அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌ பெயரில்‌ உள்ள பக்கத்தில்‌ விண்ணப்பங்கள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

அதற்கு பின்னர்‌ வரப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது. இதர விபரங்களை அலுவலகத்தில்‌ அலுவலக நாட்களில்‌ அலுவலக நேரத்தில்‌ நேரில்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்ளலாம்‌ மற்றும்‌ திருக்கோயில்‌ இணையதளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

விண்ணப்பதாரர்‌ விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

துணை ஆணையர்‌ / செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌, மருதமலை, பேரூர்‌ வட்டம்‌, கோவை மாவட்டம்‌ – 641046. தொலைபேசி எண்‌. 0422-2422490.

குறிப்பு:

விண்ணப்பங்களுடன்‌ அனுப்பப்படும்‌ அனைத்துச்‌ சான்றிதழ்களும்‌ அரசு பதிவு பெற்ற அலுவலர்‌ சான்றொப்பம்‌ பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்களை அனுப்ப கூடாது.

Download TNHRC Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here