வனக்காப்பாளர் தேர்வு நடவடிக்கை எப்போது ? – விண்ணப்பதாரர்கள் கவலை

0
வனக்காப்பாளர் தேர்வு நடவடிக்கை எப்போது - விண்ணப்பதாரர்கள் கவலை
வனக்காப்பாளர் தேர்வு நடவடிக்கை எப்போது - விண்ணப்பதாரர்கள் கவலை

வனக்காப்பாளர் தேர்வு நடவடிக்கை எப்போது – விண்ணப்பதாரர்கள் கவலை

தமிழகத்தில் காலியாக உள்ள வனக்காப்பாளர் உள்ளிட்ட வன பணியிடங்களை தமிழக வனத்துறை தேர்வாணையம் ஆனது வருடந்தோறும் தேர்வுகளை நடத்தி அதன்படி தேர்வு செய்யும். இந்த ஆண்டும் 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆன்லைன் தேர்வு :

இந்த 320 வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 66 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கினாள் அந்த பணிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்போது ?

இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் மேலும் 6 நாட்களும் 100 % பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கி இருப்பதனாலும் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விண்ணப்பத்தாரர்கள் / தேர்வர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இதற்கு வனத்துறை சார்பில் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், ஓரிரு வாரங்களில் புதிய அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!