TNEB கேங்மேன் காலிப்பணியிடங்கள் – 5,493 தேர்வர்களின் குறைகளுக்கு தீர்வு காண குழு அமைப்பு!

0
TNEB கேங்மேன் காலிப்பணியிடங்கள் - 5,493 தேர்வர்களின் குறைகளுக்கு தீர்வு காண குழு அமைப்பு!
TNEB கேங்மேன் காலிப்பணியிடங்கள் - 5,493 தேர்வர்களின் குறைகளுக்கு தீர்வு காண குழு அமைப்பு!
TNEB கேங்மேன் காலிப்பணியிடங்கள் – 5,493 தேர்வர்களின் குறைகளுக்கு தீர்வு காண குழு அமைப்பு!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்த ஒரே மாதத்தில் மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும், மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை தான் முதன்மையான காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ‘கேங்மேன்’ பதவிக்கான தேர்வில் பங்கேற்று, வேலை கிடைக்காததால் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் 5,493 பேரின் குறைகளுக்கு தீர்வு காண குழு அமைத்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு :

தமிழக மின் வாரியம், ‘கேங்மேன்’ என்ற பதவியில், 5,000 பேரை தேர்வு செய்ய, 2019 ல் அறிவிப்பு வெளியிட்டது. `மின்சார வாரியத்தில் ஏராளமான பணிகள் இருந்தபோதிலும், கேங்மேன் பணி தான் முக்கியப் பணி. மின் இணைப்புக் கேட்பவர்களுக்கு நேரில் சென்று இணைப்பைக் கொடுப்பது, மின்கம்பம் நடுவது, மின்கம்பம் ஏறுவது, மரம் வெட்டுவது, லைன் இழுத்துக் கொடுப்பது, சென்னை போன்ற பெருநகரங்களில் பூமிக்கு அடியில் மின்சார வயர்கள் செல்வதால், மின்பணிக்காகப் பள்ளம் தோண்டுவது, மின்வெட்டு பிரச்சனை சரி செய்யப்பட்ட பிறகு தோண்டிய பள்ளத்தை மூடுவது, டிரான்ஸ்பார்மர்களைப் பழுதுபார்ப்பது எனப் பலவகையான பணிகளை கேங்மேன் வேலை ஆட்கள் தான் செய்ய வேண்டும்.

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – போர்டிங் பாய்ண்ட் மாற்றினால் அபராதம் கிடையாது!

இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஐந்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டது, இருப்பினும் தமிழகத்தில் அதிகமான பட்டதாரிகள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர், அதனால் இன்ஜினியரிங் பட்டதாரிகள் உட்பட, 90 ஆயிரத்து, 124 பேர் இந்த பணிக்கு விண்ணப்பித்தனர். மேலும் விண்ணப்பதாரர்களில் உடல் தகுதி தேர்வில், 15 ஆயிரத்து 106 பேர் தேர்வாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீர் அறிவிப்பாக 10 ஆயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வான, 9,613 பேருக்கு 2019 பிப்ரவரியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த நியமன ஆணைப்படி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. இந்த தேர்வில் முதலில், 5,000 பேர் அறிவித்து திடீரென, 10 ஆயிரமாக உயர்த்தியதால், எழுத்துத் தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என, வேலை கிடைக்காதவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலைக்கு தேர்வாகாத, 5,493 பேரின் குறைகளுக்கு தீர்வு காண, தனி குழு அமைத்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இக்குழு, கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலித்து, இம்மாத இறுதிக்குள் மின் வாரியத்திடம் அறிக்கை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!